Lyrics, Tune and Video : A. Anbarasu.
Singer and Music Directions : Divine Singer .S.P.Sundar.
Production : ANJOE Arulasir Production.
இப் பாடலை பார்க்கின்ற , கேட்கின்ற,
அனைவருக்கும் நன்றிகள்.
பின்னிசை: -Karaoke of PANI NIRAIVU Song
• பணி நிறைவு பெறுகின்ற ப...
#2024newsong
#பணிநிறைவுபாராட்டுவிழா
#பணிநிறைவுபாராட்டுவிழாபாடல்
#2024trending
#தமிழ்
#retirement
#retirementtamilnnewsong
#new2024
#newtamilvideo
#newtamilsongs
பாடல் வரிகள்:
பணி நிறைவு பெறுகின்ற பண்பாளரே
அணிகளனாய் நற்குணமே அன்பாளரே
கனிச் சுவைபோல் பழகிட்ட திறனாளரே
பல்லாண்டு சுகமோடு நீர் வாழ்கவே !
எறும்புக்கே சுறுசுறுப்பைக் கற்றுத்தந்தாய்
எளிமையிலே ஏற்றங்களை பெற்றுச்சென்றாய்
எதிர்பாரா உழைப்பாளே ஏற்றம் கண்டாய்
எல்லோர்க்கும் இயன்றதை இட்டுச்சென்றாய்
பல்லாண்டு சுகமோடு நீர் வாழ்கவே !
அன்பாலே கட்டுண்டு அழவைக்கின்றாய்
அறிவாலே சாதித்து விழவைக்கின்றாய்
அழகியலே வாழ்க்கையென அரும்பிச்செய்தாய்
அன்றாடம் புதுவாழ்வு ஒளிரச்செய்தாய்
பல்லாண்டு சுகமோடு நீர் வாழ்கவே !
அன்னையைத் தந்தையைக் காட்டிநின்றாய்
ஆண்டவன் உருவாகி அருகில்நின்றாய்
நட்புக்கு இலக்கணமாய் கைகோர்க்கிறாய்
நினைவிலே நீங்காமல் துடிப்பாகிறாய்
பல்லாண்டு சுகமோடு நீர் வாழ்கவே !
ஆ. அன்பரசு சிகரம் ஆசிரியர், வேலூர்.
Негізгі бет A New Common Retirement
Пікірлер: 56