ஏழு ஜென்ம பாவங்கள் நீக்கும் அச்சுத்தமங்கலம் சோமநாதர் கோயில்
மூலவர்: சோமநாதர்
அம்பாள்: சௌந்தர்யநாயகி
தலவிருட்சம்: ருத்ராட்சம்
ஊர்: அச்சுத்தமங்கலம்
மாவட்டம்: திருவாரூர்
அச்சுதன் இங்கே இருந்து மங்கலம் பெற்ற காரணத்தினால் இந்த ஊருக்கு அச்சுதமங்கலம் என்கிற பெயர் கிடைத்தது.
பிராத்தனை
🌷இங்கு வேண்டிக்கொள்ள வேண்டிய பிராத்தனை அப்தியே நிறைவேறும். 🌷🌷திருமணமாகாத பெண்களும் ஆண்களும் இங்கு வந்து அர்ச்சனை, அபிஷேகம் செய்தால் அவர்களுக்கு விரைவில் திருமணமாகும் என்பது நம்பிக்கை.
🌷இங்குள்ள ஜுரஹரேஸ்வரரை வழிபட்டால் எவ்வளவு ஜுரம் இருந்தாலும் குணமாகும் என்கிற நம்பிக்கையும் உண்டு.
🌷 இங்கு வழிபாடு செய்ய பிரிந்த கணவன் மனைவி இருவரும் சேர்ந்து வாழக்கூடிய அமைப்பு கிடைக்கும்.
🌷 கர்ப்பிணி கோலத்தில் அம்மன் உள்ளதால் இங்கு உள்ள அம்பாளை வழிபட குழந்தை பாக்கியம் கிடைக்கும்.
தலசிறப்பு
இந்தக் கோவில் 11 விநாயகரும் 3 முருகரும் இருக்கும் சிறப்பு பெற்றது. திருமணம் ஆகாதவர்கள் இங்கு உள்ள கல்யாண சுந்தரேஸ்வரருக்கு அபிஷேகம் செய்தால் மூன்று மாதங்களில் அவர்களுக்குத் திருமணம் நடக்கும் என்கின்றனர் நேரடி அனுபவம் பெற்ற பக்தர்கள்.
பொது தகவல்
இங்குள்ள சிற்பங்கள் மிகவும் அழகானவை. கடவுள் சிலைகள் பிரமாண்டமாக இருக்கின்றன. சௌந்தரநாயகி அம்மனுக்கு அமாவாசை, பௌர்ணமி சமயங்களில் பூஜை செய்து வந்தால் நினைத்த காரியங்கள் அனைத்தும் நிறைவேறும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. ராகுவும் கேதுவும் பின்னிப் பிணைந்திருக்கும் சிற்பமே இது சேக்கிழார் கட்டிய கோயில் தான் என்பதை உறுதிப்படுத்துகிறது என்கின்றனர் கோயிலில் பணிபுரிபவர்கள். இது இந்தக் கோயிலில் மட்டுமே காணக் கிடைக்கும் காட்சி. சிவபெருமான் மூன்று அசுரர்களையும் அழித்தபோது அவர்களில் இருவரை துவார பாலகர்களாகவும், ஒருவரை அதிகார நந்தியாகவும் உருவாக்கினார் என்று சொல்லப்படுகிறது. நீங்கள் என்ன கேட்டாலும் கொடுக்கும் வல்லமை கொண்டவர் சோமநாதர் என்று அடித்துக் கூறுகின்றனர் இந்தக் கோயிலை அறிந்தவர்கள். கேட்டதைக் கொடுக்கும் ஒரே ஒரே சிவபெருமான் இந்த அச்சுதமங்கல சோமநாதர் தான் என்றும் கூறுகின்றனர்.
தலபெருமை
இந்த தலத்தில் மகாலட்சுமி மற்றும் அம்பாள் இருவரும் நெற்றிக்கண் உண்டு.
அமைவிடம்
கும்பகோணத்தில் இருந்து நன்னிலம் செல்லும் வழியில் அச்சுத்தமங்கலம் சோமநாதர் கோயில் அமைந்துள்ளது.
கும்பகோணத்தில் இருந்து நன்னிலம் செல்லும் பேருந்தில் பயணம் செய்து இத்தலம் அடையலாம்.
கோயில் Google Map Link
maps.app.goo.g...
ஆலய அர்ச்சகர் தொலைபேசி எண்
+91 7094108404
மேலும் விவரங்களுக்கு தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்
+91 7994347966
திருவலஞ்சுழி வலஞ்சுழிநாதர் கோயில் தரிசனம்
• திருவலஞ்சுழி வலஞ்சுழிந...
if you want to support us via Google pay phone pay paytm
9655896987
Join this channel to get access to perks:
/ @mathina
Join Our Channel WhatsApp Group
chat.whatsapp....
தமிழ்
Негізгі бет அச்சுதமங்கலம் சோமநாதர் கோயில் | திருமண தடை நிவர்த்தி தலம் | ஏழு ஜென்ம பாவம் நிவர்த்தி தலம்
Пікірлер: 38