குறைகளை அகற்றும் திருக்குறையலூர் உக்ர நரசிம்மர் கோயில்
பஞ்ச நரசிம்ம க்ஷேத்திரத்தின் முதல் திருத்தலம் திருக்குறையலூர்.
மூலவர் : ஸ்ரீஉக்கிர நரசிம்மர் ஸ்ரீதேவி பூதேவி சமேதராகக் காட்சி
தாயார்: ஸ்ரீஅமிர்தவல்லித் தாயார்
ஊர்: திருக்குறையலூர்
மாவட்டம்: மயிலாடுதுறை
தலவரலாறு
பார்வதியைப் பிரிந்த ஈசனுக்கு ஆறுதல் அளிக்க நரசிம்மர் அவருக்கு காட்டியருளிய திருக்கோலம் கொண்டு வைகுண்ட நரசிம்மராக அருள்கிறார்.
திருமங்கை ஆழ்வாரின் அவதாரத் தலம் எனப் பெருமை கொண்ட இந்தத் திருத்தலத்தில், அவருக்கும் குலசேகராழ்வாருக்கும் சந்நிதிகள் உள்ளன.
பொது தகவல்
கருட சேவைக்கு
தை அமாவாசையன்று திருக்குறையலூர் ஸ்ரீ உக்ர நரசிம்மப் பெருமாள் கோவிலை அடைந்து அவரை மங்களாசாசனம் செய்தவர் திருமங்கையாழ்வார்,
குறைகளை அகற்றும் ஊர் என்பதே மருவி, திருக்குறையலூர் என்றானது. முற்றிலும் குறையற்ற ஊர்..
தலசிறப்பு
கடன் பிரச்னை உள்ளவர்கள், குடும்பத்தில் பிரச்னை உள்ளவர்கள் இந்நாளிலும், அஷ்டமி, சுவாதி நாட்களிலும் நெய்விளக்கு ஏற்றி, பானக நைவேத்தியம் செய்து வழிபட்டு நலம் பெறுகிறார்கள்..
சுவாமி மலைக்கும், திருக்கூடலூருக்கும் இடையே காவிரியில் துணை ஆறாக பிரியும் மண்ணியாறு திருக்குறையலூர் வழியாக சென்று கடலில் கலக்கும் சிறப்பை வைணவ ஆச்சாரியார்கள் "மண்ணியில் நீர் தேங்கும் குறையலூர், சீர்கலியன் தோன்றிய ஊர்' என்று சிறப்பித்து பாடியுள்ளனர்.
குலசேகர ஆழ்வார், ராமானுஜர், மணவாள மாமுனிகள் போன்றோர் தரிசனம் செய்து நிறைவுற்ற தலம்.
அமைவிடம்
சீர்காழியில் இருந்து பூம்புகார் செல்லும் வழியில் உள்ள மங்கைமடம் என்ற இடத்தில் இருந்து சுமார் 2 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது மயிலாடுதுறை மற்றும் சீர்காழியில் இருந்து மங்கைமடம் வரை பேருந்தில் வந்து அங்கிருந்து இத்தலம் அடைய ஆட்டோ வசதி உள்ளது.
ஆலய அர்ச்சகர் தொலைபேசி எண்
பார்த்தசாரதி பட்டாச்சார்யா
+91 9443564650
ஜானகிராமன் தீட்சிதர்
+91 6379930603
இராஜேந்திரன் பட்டாச்சார்யா
+91 8300585283
மேலும் விவரங்களுக்கு தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்
+91 7994347966
கோயில் Google map link
maps.app.goo.gl/DMJeL5ZC3Kocf...
if you want to support us via Google pay phone pay paytm
9655896987
Join this channel to get access to perks:
/ @mathina
- தமிழ்
Негізгі бет அரசு பணி கிடைக்க அருளும் திருக்குறையலூர் உக்ர நரசிம்மர் | பஞ்ச நரசிம்மர் ஷேத்திரம்
Пікірлер: 16