சங்கடம் அகற்றும் தஞ்சை சக்கரத்தாழ்வார் திருக்கோயில்
திருமாலின் வலக்கையை அலங்கரிக்கும் சக்கர ஆயுதமாக திகழ்பவர் சக்கரத்தாழ்வார். திருமாலுக்கு இணையானவர் சக்கரத்தாழ்வார் என்று வேதாந்த தேசிகர் போற்றுகிறார். இந்த சக்கரத்தாழ்வார் திருவாழியாழ்வான், சக்கரராஜன், நேமி, திகிரி, ரதாங்கம், சுதர்சன ஆழ்வார் என பல்வேறு பெயர்களில் அழைக்கப்படுகிறார். திருமால் கோயில்களில் சக்கரத்தாழ்வாருக்கு என தனிச் சன்னதி இருப்பதைப் பார்த்திருப்போம். சக்கரத்தாழ்வார் 16 ஆயுதங்களை கைகளில் ஏந்தியிருப்பார் அதில் வலக்கையில் சக்கரம், மால், குந்தம், தண்டம், அங்குசம், சதாமுகாக்னி, மிஸ்கிரிசம், வேல் ஆகியவற்றை கொண்டிருப்பார். இடக்கையில் சங்கு, வாள், பாசம், கலப்பை, வஜ்ராயுதம், கதை, உலக்கை, திரிசூலம் ஆகிய ஆயுதங்களை வைத்திருப்பார். இத்தகைய சிறப்பு பெற்ற சக்கரத்தாழ்வாரை, “சோதி வலத்துறையும் சுடராழியும் பல்லாண்டு” என பெரியாழ்வார் வாழ்த்திப் பாடியுள்ளார்.
பொதுவாக பெருமாள் கோவிலில் மூலவராக திருமால் வீற்றிருப்பார். ஆனால் இந்த ராஜகோபால சுவாமி கோவிலில் மூலவர் ஸ்தானத்தில் சக்கரத்தாழ்வார் காட்சியளிக்கிறார். சுதர்சன வல்லி- விஜயவல்லி உடனாய சக்கரத்தாழ்வாராக இங்கே வீற்றிருக்கிறார்.பொதுவாக சக்கரத்தாழ்வாருக்கு பின்புறம் நரசிம்மர் இடம் பெற்றிருப்பார். ஆனால் இங்கு மூலவராக அமைந்திருப்பதால் அதில் இடம்பெறாமல், ராஜ கோபுரத்திற்கு பின்புறம் வலது பக்கத்தில் யோக நரசிம்மரும், இடது புறத்தில் கல்யாண நரசிம்மரும் சிற்பமாக காட்சிகளிக்கின்றனர். இந்த இரு நரசிம்மர்களும் நேர்பார்வையாக மூலவரான சக்கரத்தாழ்வாரைப் பார்த்தபடியே அமர்ந்திருப்பது தனிச்சிறப்பு.
இந்த கோயிலில் மூன்று சக்கரத்தாழ்வார்கள் இருக்கின்றனர். இது சிறப்பானதாக கருதப்படுகிறது. மூலவரான சக்கரத்தாழ்வார் 16 கரங்களுடனும், உற்சவரான சக்கரத்தாழ்வாரும் 16 திருக்கரங்களுடன் காட்சி அளிக்கிறார். மேலும், அஷ்ட புஜங்கள் (அதாவது 8 கரங்கள்) கொண்ட சக்கரத்தாழ்வாரும் இங்கே இருக்கிறார்.இந்த கோயிலில் வழிபட்டால், கடன் தொல்லை நீங்கும் என்றும் வியாதிகள், எதிரிகள் தரும் துன்பம் இவற்றை முற்றிலும் நீக்கி சந்தோஷத்தை அளிப்பார் எனவும், கல்வி யோகத்தை அளிப்பார் என்ற நம்பிக்கை நிலவுகிறது. மேலும், புற்றுநோய் போன்ற உயிர் கொல்லி நோயால் பதிக்கப்பட்டவர்கள் இந்த சக்கரத்தாழ்வாரை வணங்கி வருவதால் நோய் நீங்கி மரணபயம் போகும் என்கின்றனர்.
Негізгі бет 🙏 சங்கடம் அகற்றும் தஞ்சை சக்கரத்தாழ்வார் திருக்கோயில்
Пікірлер