செஸ்வான் சிக்கன் ப்ரைட் ரைஸ் | Schezwan Chicken Fried Rice In Tamil | Indo Chinese Recipe |
#செஸ்வான்சிக்கன்ப்ரைட்ரைஸ் #schezwanchickenfriedrice #schezwansauce #chickenfriedrice #lunchrecipe #friedricerecipe #hemasubramanian #homecookingtamil
We also produce these videos on English for everyone to understand.
Please check the link and subscribe @HomeCookingShow
Schezwan Chicken Fried Rice : • Schezwan Chicken Fried...
Our Other Recipes
இறால் ப்ரைட் ரைஸ் : • இறால் ப்ரைட் ரைஸ் | Pr...
சீஸ் ப்ரைட் ரைஸ் : • சீஸ் ப்ரைட் ரைஸ் | Che...
Here is the link to Amazon HomeCooking Store where I have curated products that I use and are similar to what I use for your reference and purchase
www.amazon.in/...
செஸ்வான் சிக்கன் ப்ரைட் ரைஸ்
தேவையான பொருட்கள்
செஸ்வான் சாஸ் செய்ய
காய்ந்த மிளகாய் - 20
எண்ணெய் - 1 மேசைக்கரண்டி
இஞ்சி - 2 தேக்கரண்டி நறுக்கியது
பூண்டு - 2 தேக்கரண்டி நறுக்கியது
கொத்தமல்லி தண்டு - 1 தேக்கரண்டி நறுக்கியது
வினிகர் - 3 தேக்கரண்டி
உப்பு - 1 தேக்கரண்டி
மிளகு தூள்
சர்க்கரை - 1 தேக்கரண்டி
தண்ணீர் - 1 கப்
சாதம் செய்ய
பாஸ்மதி ரைஸ் - 1 கப்
உப்பு - 1 தேக்கரண்டி
தண்ணீர்
ப்ரைட் ரைஸ் செய்ய
எண்ணெய் - 1 மேசைக்கரண்டி
இஞ்சி - 2 தேக்கரண்டி நறுக்கியது
பூண்டு - 1 தேக்கரண்டி நறுக்கியது
சிவப்பு மிளகாய் - 2 நறுக்கியது
வெங்காயத்தாள் வெங்காயம் - 1/2 கப் நறுக்கியது
பச்சை குடைமிளகாய் - 1/2 கப் நறுக்கியது
எலும்பில்லாத சிக்கன் - 200 கிராம்
மிளகு தூள்
செய்த செஸ்வான் சாஸ் - 3 மேசைக்கரண்டி
வேகவைத்த சாதம்
வெங்காயத்தாள் கீரை நறுக்கியது
முட்டை - 3
செய்முறை
செஸ்வான் சாஸ் செய்ய
1. காய்ந்த மிளகாயை வெந்நீரில் 1 மணி நேரம் ஊறவைத்து, மிக்ஸியில் போட்டு விழுதாக அரைக்கவும்.
2. அகல பேன்'னில் எண்ணெய் ஊற்றி, இஞ்சி, பூண்டு, கொத்தமல்லி தண்டு, சேர்த்து வதக்கவும்.
3. இதில் அரைத்த மிளகாய் விழுது சேர்த்து கிளறவும்.
4. பின் இதில் வினிகர், உப்பு, சர்க்கரை சேர்த்து 5 நிமிடம் கிளறவும்.
5. அடுத்து இதில் தண்ணீர் ஊற்றி, மேலும் 10 நிமிடம் கொதிக்கவிடவும்.
சாதம் வேகவைக்க
6. அகல கடாயில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி, பாஸ்மதி அரிசியை போட்டு, உப்பு சேர்த்து கொதிக்கவிடவும்.
7. சாதம் முழுமையாக வெந்ததும், வடிகட்டி எடுத்து வைக்கவும்.
ப்ரைட் ரைஸ் செய்ய
8. அகல பேன்'னில் எண்ணெய் ஊற்றி, இஞ்சி, பூண்டு, சிவப்பு மிளகாய் சேர்த்து கிண்டவும்.
9. இதில் வெங்காயத்தாள் வெங்காயம், குடைமிளகாய் சேர்த்து கிண்டவும்.
10. அடுத்து இதில் சிக்கன் துண்டுகளை போட்டு அதிக தீயில் 5 நிமிடம் வேகவைக்கவும்.
11. இதில் உப்பு மற்றும் மிளகு தூள் சேர்க்கவும்.
12. அடுத்து செய்த செஸ்வான் சாஸ் சேர்த்து கிளறவும்.
13. வேகவைத்த சாதம் போட்டு, உடையாமல் கிண்டவும்.
14. இறுதியாக வெங்காயத்தாள் கீரை சேர்க்கவும்.
15. மற்றோரு பேன்'னில் எண்ணெய் ஊற்றி, முட்டையை உடைத்து ஊற்றி, உப்பு மற்றும் மிளகு தூள் சேர்த்து கிண்டவும்.
16. வெந்த முட்டையை ப்ரைட் ரைஸ் உடன் சேர்த்து கிளறவும்.
17. செஸ்வான் ப்ரைட் ரைஸ் தயார்.
You can buy our book and classes on www.21frames.i...
HAPPY COOKING WITH HOMECOOKING
ENJOY OUR RECIPES
WEBSITE: www.21frames.i...
FACEBOOK - / homecookingtamil
KZitem: / homecookingtamil
INSTAGRAM - / homecookingshow
A Ventuno Production : www.ventunotec...
Негізгі бет Тәжірибелік нұсқаулар және стиль செஸ்வான் சிக்கன் ப்ரைட் ரைஸ் | Schezwan Chicken Fried Rice In Tamil | Indo Chinese Recipe |
Пікірлер: 27