வெளிநாட்டு வேலைக்கு செல்வதற்கு முன்பாக அந்த நாட்டின் சூழ்நிலைகள் வேலை வாய்ப்புகள் அனைத்தையும் ஒரு முறைக்கு இருமுறை நாம்தான் தெரிந்து கொள்ள வேண்டும் நமக்கு வேலை கிடைத்தால் போதும் என்று சென்று விட வேண்டியது அங்கு சென்ற பிறகு பல காரணங்களை சொல்லி அந்த வாய்ப்புகளை உதறிவிட்டு மீண்டும் நாட்டிற்கே வந்து விட வேண்டியது ஒரு வாய்ப்பு என்பது சுலபமாக கிடைத்து விடாது அது உங்களுக்கு நன்றாகவே தெரியும் இறந்தபோதிலும் கிடைக்கும் வாய்ப்பை சரியான முறையில் பயன்படுத்தாமல் நமக்கு முன்பு இருக்கும் சில சவால்களை எதிர்கொள்ள தெரியாமல் சில சச்சரவுகளை எண்ணி பயணத்தை பாதியிலே முடித்துக் கொள்வது. நாம் குறைகளை சொல்ல தயாராக இருக்கும்பொழுது நம் மீது இருக்கும் குறைகளையும் நாம் ஒத்துக்கொள்ள வேண்டும். ஒருவருடைய முயற்சியை ஊக்கப்படுத்தவில்லை என்றாலும் அவர்களுடைய முயற்ச்சியை கெடுக்கும் வகையில் சிதைக்கும் வகையில் நாம் கருத்துக்களை தெரிவிக்கக் கூடாது. தொடர்ந்து வெளிநாட்டு வேலை வாய்ப்புகளை முயற்சி செய்யும் நபர்களுக்கு அவர்கள் செய்யும் முயற்சி தவறானது என்பதை சித்தரிக்கும் வகையில் தொடர்ந்து கருத்துக்களை பதிவு செய்து கொண்டிருக்கும் நண்பர்களுக்கான சவால் தான் இந்த பதிவு. நீங்கள் இல்லை என்று சொல்வதும் முடியாது என்று சொல்வதும் நான் முடியும் முடியும் என்று சொல்வதும் தொடர்கதையாக இருக்கிறது இதற்கு தீர்வாக தான் இந்த சவால்கள் தொடர்ந்து குற்றம் சாட்டக் கூடிய நபர்கள் இந்த தவறுகளை ஏற்றுக்கொண்டு என்னுடன் களத்தில் சந்திக்க வேண்டும் என்று பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன். எந்தவித தலகணம் இல்லாமல் தான் இந்த சவாலை நான் கொடுக்கின்றேன் இதை நீங்கள் தவறாக எடுத்துக் கொள்ளக் கூடாது ஏனென்றால் ஒருவருடைய மனதில் நம்பிக்கையை விதைப்பது என்பது சுலபமான காரியம் அல்ல ஆனால் ஒருவருடைய நம்பிக்கையை சிதைப்பது என்பது சுலபமான ஒன்று அதை நாம் எக்காரணம் கொண்டும் செய்யக் கூடாது என்பதில் நான் உறுதியாக இருக்கின்றேன் நான் தவறாக பேசியதாக நீங்கள் நினைத்தால் அதற்காக நான் வருத்தம் தெரிவித்துக் கொள்கின்றேன். வாழ்க்கையை முன்னேற்ற வேண்டும் என்று வயது வித்தியாசம் இல்லாமல் போராடிக் கொண்டு இருக்கும் சகோதரர்களுக்கு ஏதாவது ஒரு வகையில் நமது பங்கு இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் தான் நான் தொடர்ந்து பதிவுகளை பதிவு செய்து கொண்டிருக்கிறேன் என்பதை பணிவுடன் உங்களிடம் தெரிவித்துக் கொள்கிறேன்.
WHATSAPP CHANNEL GROUP LINK
whatsapp.com/c...
Негізгі бет #FOREIGN
Пікірлер: 145