Sing and Pray this way of the cross song with devotion.
Lyrics:
கொல்கதா மலை மீதில்
கோர சிலுவை தாங்கி
போவது யாரோ
இயேசு தேவன் அவரோ -2
1. ஓசான்னா பாடிய கூட்டம்
ஒழிக ஒழிக என்றதே
சிலுவை மரண தீர்ப்பு
என் இயேசு தேவனுக்கு -2
2. ஜெருசலேம் வீதி வழியே
குருதி சிந்தி சிந்தி
தோளில் சிலுவை தாங்கி
போகிறார் இயேசு தேவன் -2
3. கல்தூணில் கட்டி அடித்தும்
முள்முடி சிரசை துளைத்தும்
தளர்வுற்ற என் இயேசு தேவன்
தடுமாறி வீழ்ந்தார் -2
4. அறிஞர்கள் புகழ்ந்த மகனை
சேவகர் ஏளனம் செய்ய
தாயும் மகனும் சந்திக்க
உள்ளம் உருகி நின்றனர் -2
5. படைவீரர் கட்டளை ஏற்று
உதவிசெய்ய வந்த சீமோன்
சிலுவை மரத்தைச் சுமந்து
அழியாப் புகழை பெற்றார் -2
6. யூத குலத்தின் மரபை உடைத்து
வீதியில் வந்த வெரோணிக்காள்
இயேசுவின் வதனம் துடைத்து
புரட்சி படைத்து நின்றாள் -2
7. கடல் நீரின்மேல் நடந்த கால்கள்
வலிமை இழந்து மண்ணில் சரிய
இறை சித்தம் நிறைவேற
வலியை மறந்து எழுந்தார் -2
8. எனக்காக அழவேண்டாம் - உங்கள்
பிள்ளைகளுக்காய் அழுங்கள் என்று
கண்ணீர் வடித்த மகளிர்க்கு
புதுவேதம் மொழிந்து சென்றார் -2
9. வீழ்ந்த விதைதான் விருட்சமாகும்
வீழ்ந்து எழுந்தால் வெற்றி நிலைக்கும்
பாவசேற்றில் வீழும் மாந்தர்
திருந்தி வாழ வீழ்ந்து எழுந்தார் -2
10. வயல்வெளி மலர்களுக்கும்
மேன்மையான ஆடை தந்தவர்
தன் ஆடை களைய இங்கு
அவமானம் ஏற்று நின்றார் -2
11. பச்சை மேனியில் ஆணி அடிக்க
அங்கம் யாவும் துடிதுடிக்க
இயேசுவின் துயரம் கண்டு
உருகாத மனமும் உண்டோ -2
12. தந்தையே இவரை மன்னியும்
இவர் செய்வது இவருக்கு தெரியாது
உயிர் பிரியும் நிலையிலும்
பகைவர்க்காக வேண்டி நின்றார் -2
13. தாயுள்ளம் போல் இங்கு
எதுவும் உண்டோ - பெற்ற
தாயுள்ளம் போல் இங்கு எதுவும் உண்டோ
அன்போடு வளர்த்த மகனின் அங்கங்கள் சிதைந்து
உயிரற்ற உடலை மார்போடு அணைத்து வெதும்பும் - தாயுள்ளம்
என் மகனே என் மகனே -3
எனக்கதரும் நிலை கண்டு
உருகாத நெஞ்சமும் உலகில் உண்டோ
மழலையாய் மடிமீது தாலாட்டிய மகன் இங்கு
உயிரற்ற உடலாய் சுமந்திடும் தாயின்
வேதனை தீர்ப்பார் யாரோ
14. உலகை படைத்த இறைவனுக்கு
தலை சாய்த்திட இடமில்லை
இரவல் கல்லறையில் இயேசு
அமைதியாய் துகில் கொள்கிறார் -2
Download this song in my telegram channel:
t.me/JesusWors...
Follow on my instagram channel:
/ tamilcatholicsongs
***********************************
Tamil Catholic Mass Songs - This channel is intended for sole purpose to listen songs which is sung during tamil catholic mass.
Sing and Praise Jesus with songs.
Hail Jesus
Thanks and Credits to lyricists (including Bishops, Priests & Nuns), Singers, Music directors, composers and instrumentalists.
Jesus Christ bless and guide them.
Негізгі бет Golgotha malai meethil | கொல்கதா மலை மீதில் | Latest Way Of The cross | சிலுவைப் பாதை | 45min |
Пікірлер: 16