திபா 107: 2-3. 4-5. 6-7. 8-9 (பல்லவி: 1)
பல்லவி: ஆண்டவருக்கு நன்றி செலுத்துங்கள்; ஏனெனில், அவர் நல்லவர்; என்றென்றும் உள்ளது அவரது பேரன்பு.
2.ஆண்டவரால் மீட்படைந்தோர், எதிரியின் கையினின்று அவரால் மீட்கப்பட்டோர்,
3.கிழக்கினின்றும், மேற்கினின்றும் வடக்கினின்றும் தெற்கினின்றும், பல நாடுகளினின்றும் ஒன்று சேர்க்கப்பட்டோர் சொல்வார்களாக. - பல்லவி
4.பாலைநிலத்தில் பாழ்வெளியில் சிலர் அலைந்து திரிந்தனர்; குடியிருக்குமாறு ஒரு நகருக்குச் செல்ல அவர்கள் வழி காணவில்லை;
5.பசியுற்றனர்; தாகமுற்றனர்; மனச்சோர்வுற்றுக் களைத்துப் போயினர். - பல்லவி
6.தம் நெருக்கடியில் ஆண்டவரைக் கூவியழைத்தனர்; அவர்களுக்குற்ற துன்பங்களிலிருந்து அவர்களை அவர் விடுவித்தார்.
7.நேரிய பாதையில் அவர்களை வழி நடத்தினார்; குடியிருக்கும் நகரை அவர்கள் அடையச் செய்தார். - பல்லவி
8.ஆண்டவரின் பேரன்பை முன்னிட்டு, மானிடர்களுக்காக அவர் செய்த வியத்தகு செயல்களை முன்னிட்டு, அவர்கள் அவருக்கு நன்றி செலுத்துவார்களாக!
9.ஏனெனில், தாகமுற்றோர்க்கு அவர் நிறைவளித்தார்; பசியுற்றோரை நன்மையால் நிரப்பினார். - பல்லவி
Check us at: www.madhatv.in/ Subscribe to us on :
Let’s Stay Connected :
Facebook:
/ madhatv
Instagram:
www.instagram....
Whatsapp:
chat.whatsapp....
chat.whatsapp.....
Twitter: / madha_tv
#dhinamoruthirupadal #madhatvdhinamoruthirupaadal #responsehymn #responsesongs #dhiyanapadal #responsehymntamil #padhiluraipadal #wordofgod #peace #jesuschrist #bible
Негізгі бет இன்றைய திருப்பாடல் | 23.08.2024 | Madha TV
Пікірлер: 1