1) காங்கிரஸ் தொடர்ந்து எதிர்க்கட்சி வரிசையிலேயே இருக்கும் - குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதத்தில் பிரதமர் நரேந்திர மோதி பேச்சு.
2) நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் நாட்டின் நலனை கருத்தில் கொண்டு பணியாற்ற வேண்டும் - பிரதமர் நரேந்திர மோதி வலியுறுத்தல்.
3) மக்களவையில் அவைக்குறிப்பிலிருந்து நீக்கப்பட்ட சர்ச்சைக் கருத்துக்கள் - மக்கள் மத்தியில் உண்மையை மறுக்க முடியாது என எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கருத்து.
4) நீதிமன்றங்கள் வெறும் செங்கற்களால் ஆனவை அல்ல, மக்களின் நம்பிக்கையாலும், விருப்பங்களாலும் எழுப்பப்பட்டவை - உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி ஒய் சந்திரசூட் உரை.
5) தமிழக மீனவர்கள் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் - வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதலமைச்சர் மு க ஸ்டாலின் கடிதம்.
******இலங்கை சிறையிலுள்ள தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்.
6) உத்தரப்பிரதேச மாநிலத்தில் ஆன்மீக சொற்பொழிவு நடைபெற்ற இடத்தில் கூட்ட நெரிசல் - 100க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு.
7) யாழ்ப்பாணம் மாவட்டத்தில் சுமார் ஆயிரம் மழை நீர் சேகரிப்பு அமைப்புகள் - இந்தியா உதவியுடன் அமைக்க இலங்கை அமைச்சரவை ஒப்புதல்.
8) பிரேசிலில் கனமழைக்கு குறைந்தது 179 பேர் உயிரிழப்பு - பாதிக்கப்பட்ட மக்களை மீட்க பணிகள் தீவிரம்.
9) தென்மேற்கு பருவமழை நாடு முழுவதும் தீவிரம் - வடகிழக்கு மாநிலங்களுக்கு வரும் 4ம் தேதிவரை கனமழை எச்சரிக்கை.
10) விம்பிள்டன் டென்னிஸ் - காயம் காரணமாக போட்டியிலிருந்து விலகினார் ஆண்டி முர்ரே.
Visit : TamilNews - Doordarshan
EMAIL : PodhigaiNews2007@gmail.com
INSTAGRAM : / ddpodhigainews
FACEBOOK : / ddpodhigainews
TWITTER : / tamilnews-doordarshan@...
KZitem : / tamilnewsdoordarshan
Негізгі бет இரவு 7.00 மணி DD தமிழ் செய்திகள் [02.07.2024]
Пікірлер