#Partnership ஹமாஸ் பயங்கரவாத அமைப்பு கடந்த ஆண்டு அக்டோபரில் இஸ்ரேல் மீது திடீர் தாக்குதல் நடத்தியது.
இந்த தாக்குதலை தொடர்ந்து உருவாகிய போர் ஓராண்டுக்கும் மேலாக நீடிக்கிறது.
ஹமாஸ் மட்டுமின்றி அதன் ஆதரவு கரங்களான ஹெஸ்புலா, ஈரான் மீதும் இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது.
இந்த தீவிர மோதலில் ஹமாசின் உச்ச தலைவர் இப்ராகிம் ஹனியே
கொல்லப்பட்டார்.
ஈரான் அதிபர் பதவி ஏற்பு விழாவுக்காக சென்றிருந்த ஹனியே இஸ்ரேல் குண்டுக்கு இரையானார்.
ஹெஸ்புலாவின் உச்ச தலைவர் நஸ்ரல்லாவும் இஸ்ரேலின் தாக்குதலில் இறந்தார்.
ஹமாசின் தலைவர் இறந்ததை அடுத்து அந்த பதவிக்கு யாஹ்யா சின்வார் Yahya Sinwar என்ற மூத்த ஹமாஸ் உறுப்பினர் கடந்த ஆகஸ்ட்டில் நியமிக்கப்பட்டார்.
62 வயதான யாஹ்யா சின்வார் மிகவும் சக்தி வாய்ந்த ஹமாஸ் தலைவர்.
இஸ்ரேலுடன் போரை ஆரம்பிப்பதற்கு காரணமாக இருந்த ஹமாசின் தாக்குதலை முன்னின்று நடத்தியதில் முக்கியமானவர்.
இவரையும் தீர்த்து கட்ட இஸ்ரேல் பலகட்ட தாக்குதலை முன்னெடுத்தது.
அவரையும் இஸ்ரேல் தீர்த்துக்கட்டியதாக கடந்த மாதம் தகவல் வெளியானது.
காசாவில் உள்ள பள்ளி ஒன்றில் ஹமாஸ் பயங்கரவாதிகள் மீது
ராக்கெட் குண்டுகளை இஸ்ரேல் ராணுவம் வீசியது.#Gaza #YahyaSinwar #Israel #HamasChief #dinamalar
Негізгі бет இஸ்ரேல் தாக்குதலில் ஹமாஸ் தலைவர் கதை முடிந்ததா? | Gaza | Yahya Sinwar | Israel | Hamas Chief
Пікірлер: 77