#Partnership காங்., - பாஜ இருவரில் சாதித்தது யார்? சறுக்கியது யார்? | Congress | BJP | 15 years | Who grew up | Who skated
இந்த ஆண்டு நடந்த லோக்சபா தேர்தலில் பாஜ வெற்றி பெற்று 3வது முறையாக மத்தியில் ஆட்சி அமைத்தது.
எப்படியாவது ஆட்சியை கைப்பற்ற நினைத்த காங்கிரஸ், பல்வேறு கட்சிகளுடன் சேர்ந்து இண்டியா என்ற மாபெரும் கூட்டணி அமைத்து கடுமையாக போராடியதன் பலனாக இந்த முறை வலுவான எதிர்கட்சியாக மாறியது.
2 லோக்சபா தேர்தலுக்கு இடையில் மாநிலங்களில் நடக்கும் சட்டசபை தேர்தல் முடிவுகள் மத்தியில் அமையும் ஆட்சியின் பலத்தை எடைபோட உதவுகிறது.
அந்த வகையில் சமீபத்தில் நடந்த ஹரியானா, ஜம்மு காஷ்மீர் சட்டசபை தேர்தல் முடிவுகள் தேசிய அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன.
இந்த சூழலில் தேசிய கட்சிகளில் பிரதானமாக பார்க்கப்படும் பா.ஜ, காங்கிரஸ் கடந்த 15 ஆண்டுகளில் எந்தளவிற்கு வளர்ச்சியடைந்துள்ளன என்பது பற்றிய புள்ளி விபரங்கள் தெரிய வந்துள்ளது.
2009ல் 32 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் காங்கிரஸ் மட்டும் 13 மாநிலங்களில் ஆட்சியில் இருந்தது.
அதன் கூட்டணி கட்சிகளான திமுக தமிழகத்திலும், ஜார்க்கண்ட் முக்தி மோர்சா ஜார்க்கண்டிலும், ஜம்மு காஷ்மீரில் தேசிய மாநாட்டு கட்சியும் ஆட்சியில் இருந்தன.
அப்போது 6 மாநிலங்களில் பா.ஜ தலைமையிலான ஆட்சியும், பஞ்சாப், பீஹாரில் பா.ஜ கூட்டணி ஆட்சியும் இருந்தது.
2014ல் நடந்த லோக்சபா தேர்தலில் பா.ஜ வெற்றி பெற்று மோடி பிரதமராக பொறுப்பேற்றபோதும், பா.ஜ வசம் 6 மாநிலங்கள் மட்டுமே இருந்தன. அதன் கூட்டணி கட்சிகள் 4 மாநிலங்களில் ஆட்சி செய்தன.
அப்போது காங்கிரஸ் வசம் 9 மாநிலங்களும், அதன் கூட்டணி கட்சிகள் வசம் 3 மாநிலங்களும் இருந்தன.
படிபடியாக பா.ஜவின் வளர்ச்சி மேலோங்க, காங்கிரஸ் வசமிருந்த மாநிலங்களின் எண்ணிக்கை குறையத் துவங்கியது.
2019ல் மோடி 2வது முறையாக பொறுப்பேற்றபோது, பா.ஜ ஆட்சி 10 மாநிலங்களிலும், அதன் கூட்டணி கட்சிகளின் ஆட்சி 9 மாநிலங்களிலும் விரிவடைந்தது.
காங்கிரஸ் வெறும் 5 மாநிலங்களில் மட்டுமே ஆட்சியில் இருந்தது. அதன் கூட்டணி கட்சிகள் நாடு முழுதும் ஆட்சியை இழந்திருந்தன.
தொடர்ந்து இறங்குமுகமாக இருந்த காங்கிரஸ், 2024ல் எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைத்து 'இண்டியா' எனும் கூட்டணியை உருவாக்கியது.
அதன் மூலம் இப்போது இண்டியா கூட்டணி 7 மாநிலங்களில் ஆட்சி செய்கிறது. மூன்று மாநிலங்களில் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது.
ஆனால் பா.ஜ., 12 மாநிலங்களிலும், 8 மாநிலங்களில் அதன் கூட்டணி கட்சிகளும் ஆட்சி செய்கின்றன.
புள்ளி விபரங்களின்படி பார்த்தால் 2009 முதல் 2024 வரையிலான கால கட்டத்தில் பா.ஜவின் வளர்ச்சி மேலோங்கி உள்ளது.
மிகப்பெரிய சரிவை சந்தித்த காங்கிரஸ், எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைத்த தயவில் தற்போது சில மாநிலங்களில் மீண்டும் கால் பதித்திருப்பதும் தெரியவருகிறது.
அதாவது 2009ல் பா.ஜ மற்றும் கூட்டணி கட்சிகள் மொத்தம் 8 மாநிலங்களிலும், காங்., மற்றும் கூட்டணி கட்சிகள் மொத்தம் 16 மாநிலங்களிலும் ஆட்சி செய்துள்ளன.
அதுவே 2014ல் பா.ஜ மற்றும் கூட்டணி கட்சிகள் ஆளும் மாநிலங்களின் எண்ணிக்கை 8ல் இருந்து 10 ஆக உயர்ந்தது.
காங்., மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் ஆளும் மாநிலங்களின் எண்ணிக்கை 16ல் இருந்து 12 ஆக குறைந்தது.
2019ல் பா.ஜ மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் ஆளும் மாநிலங்களின் எண்ணிக்கை 19 ஆக உயர்ந்தபோது, காங் வெறும் 5 மாநிலங்களில் மட்டுமே ஆட்சியில் இருந்தது.
இப்போது 2024ல் பா.ஜ., மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் மொத்தம் 20 மாநிலங்களில் ஆட்சியில் இருக்கின்றன.
ஆனால் காங் மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் மொத்தம் 10 மாநிலங்களில் மட்டுமே ஆட்சி செய்வது குறிப்பிடத்தக்கது.#Congress #BJP #15years #Whogrewup #Whoskated
Негізгі бет காங்., - பாஜ இருவரில் சாதித்தது யார்? சறுக்கியது யார்? | Congress | BJP | 15 years | Who grew up | W
Пікірлер