27 நட்சத்திரங்களில் சூரியனின் முதலாவது நட்சத்திரமாக வருகிறது கார்த்திகை நட்சத்திரம். அழகான தோற்றமும், வலிமையான உடலமைப்பும், உஷ்ணத் தன்மையும் கொண்டவர்களாக இருப்பார்கள். எதிலும் சுறுசுறுப்பாக செயல்படுவார்கள். சிறந்த ஆலோசகராகவும், தன்னம்பிக்கைக் கொண்டவராகவும் விளங்குவார்கள். எந்த வேலையையும் ஆராய்ந்து சிறப்பாக செய்வதில் நிபுணர்கள். சமூகத்தில் மதிப்பு, மரியாதையுடன் நடந்து கொள்வார்கள்.
பார்ப்பதற்கு முரட்டுத்தனமானவராக தெரிந்தாலும் உள்ளத்தில் மென்மையைக் கொண்டவர்கள். ஆன்மீகத்தில் ஆர்வம் கொண்டவர்களாக இருப்பார்கள். கல்வியாக இருந்தாலும், வேலையாக இருந்தாலும், தொழிலாக இருந்தாலும் சரி, எதிலும் முன்னணியில் இருக்க வேண்டும் என எண்ணுபவர்கள்.
மற்றவர்களுக்கு சிறந்த ஆலோசனைகளை வழங்குவதில் வல்லவர்களாகத் திகழ்வார்கள். சிறந்த பேச்சாற்றல் மற்றும் விவாதம் புரியும் திறன் கொண்டவர்களாக திகழ்வார்கள். சிறந்த குணங்களைக் கொண்டவர்களாக இருப்பார்கள். இசை மற்றும் கலைகளில் சிறந்த நாட்டம் கொண்டவர்களாக இருப்பார்கள்.
Негізгі бет கார்த்திகை நட்சத்திரப் பலன்கள்
Пікірлер