கோவை-அவினாசி சாலையில் உப்பிலிபாளையம் முதல் கோல்டுவின்ஸ் வரை 10 கிலோ மீட்டர் தூரத்துக்கு ரூ. ஆயிரத்து 621 கோடி செலவில் உயர்மட்ட மேம்பாலம் கட்டப்படுகிறது. இப்போது அதற்கான ஓடு தளத்தை ஒரே முறையில் தயாரிக்காமல் பகுதி பகுதியாக அதாவது செக்மெண்ட்டாக தயாரித்து கொண்டு வந்து சேர்க்கும் தொழில்நுட்பத்தில் கட்டுகிறார்கள். இதை செக்மெண்டல் பாக்ஸ் கர்டர் கன்ஸ்ட்ரக்சன் என்பார்கள்.
பழைய தொழில்நுட்பத்தில் பாலங்களில் ஓடுதளம் அமைப்பதற்கு அதிக நாட்கள் ஆகும். அதன்படி கோவை-அவினாசி சாலையின் நடுவில் அமைக்கப்பட்டுள்ள இரண்டு கான்கிரீட் தூண்களுக்கு இடையில் உள்ள 30 மீட்டர் தூரத்திற்கு உயர்மட்ட மேம்பாலத்துக்கான கான்கிரீட் ஓடு தளம் போடுவதற்கு சுமார் 60 நாட்கள் ஆகும். ஆனால் புதிய தொழில்நுட்பத்தில் அதே ஓடுதளம் அமைக்க 5 நாட்கள் போதுமானது. அந்த தொழில்நுட்பம் குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.#கோயம்புத்தூர் #Coimbatore #avinashibridge #flyover
Негізгі бет கோவை-அவினாசி சாலையில எப்படிங்க பாலம் கட்டுறாங்க! Avinashi Bridge | Coimbatore
Пікірлер: 78