#Coimbatore#trending#expo#exhibition #textile#Mills#machinery#spares#கோவையில் சர்வதேச சைமா ஜவுளி டெக்ஸ்ஃபேர் 2024 !!
கோவை ஜூன்
கோவையில் துவங்கப்பட்ட தென்னிந்திய பஞ்சாலைகள் சங்கம் (சைமா), அனைத்து ஜவுளிப் பிரிவுகளையும் உள்ளடக்கி செயல்படுகிறது ,சைமா கடந்த 2001-ஆம் ஆண்டு முதல் டெக்ஸ்ஃபேர் என்ற பெயரில் ஜவுளி இயந்திரங்கள் மற்றும் உதிரி பாகங்களின் சர்வதேச அளவில் ஒரு குடையின் கீழ் கொண்டு வந்து பரஸ்பரம் பயன் அடையும் வகையில் இந்த கண் காட்சியை நடத்தி வருகின்றது, அதன் பதினான்காவது கண்காட்சி வருகின்ற ஜூன் 21ஆம் தேதி முதல் 24ஆம் தேதி வரை காலை 10 மணிமுதல் மாலை 6 மணி வரை கோவை கொடீசியா கண்காட்சி வளாகத்தில் நடைபெற இருக்கிறது,
இது குறித்து நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் சைமாவின் தலைவர், டாக்டர் எஸ்.கே.சுந்தரராமன் மற்றும் துணை தலைவர், எஸ்.கிருஷ்ண குமார் ஆகியோர் கூறுகையில் 240 ஜவுளி இயந்திரங்கள் உதிரிபாகங் களின் தயாரிப்பாளர்கள் மற்றும் விநியோகிப்பாளர்கள் 260 ஸ்டால் களில் தங்கள் பொருட்களை கண்காட்சியில் வைக்க உள்ளார்கள் என்று கூறினர் ,
தமிழகத்தைத் தவிர, குஜராத், மராட்டியம், மத்திய பிரதேசம், மேற்கு வங்கம், கர்நாடகா ஆகிய மாநிலங்கள் மற்றும் டாமன் & டையூ மற்றும் தாத்ராநகர் ஹாவேலி ஆகிய யூனியன் பிரதேசங்களை சேர்ந்த தங்கள் பொருட்களை இக்கண்காட்சியில் காட்சிப்படுத்த உள்ளார்கள்,இது தவிர ஐரோப்பிய ஒன்றியத்தின் அங்கமான சுவிட்சர்லாந்து, இத்தாலி மற்றும் பெல்ஜியம் போன்ற நாடுகளையும் மற்றும் ஜப்பான், சீன நாடுகளையும் சேர்ந்த ஜவுளி இயந்திர தயாரி ப்பாளர்கள் இந்த கண்காட்சியில் பங்கு பெற உள்ளனர் இதன் மூலம் ரூ.1,500 கோடி அளவிற்கு வர்த்தகம் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுவதாக தெரிவித்தனர்.
Негізгі бет கோவையில் சர்வதேச சைமா ஜவுளி டெக்ஸ்ஃபேர் 2024 ! TEX FAIR expo for textile at Codissia in COIMBATORE !
Пікірлер