We also produce these videos on English for everyone to understand
Please check the link and subscribe
• Kadai Paneer - Restaur...
தேவையான பொருட்கள்
வெங்காயம் மற்றும் குடைமிளகாயை வதக்க
எண்ணெய் - 2 தேக்கரண்டி
வெங்காயம் - 1 பெரிதாக நறுக்கியது
குடைமிளகாய் - 1 பெரிதாக நறுக்கியது
பன்னீரை வறுக்க
வெண்ணெய் - 1 மேசைக்கரண்டி
பன்னீர் - 400 கிராம் பெரிய துண்டுகள்
மசாலா தூள் தயாரிக்க
மல்லி விதைகள் - 1 மேசைக்கரண்டி
மிளகு - 1/2 தேக்கரண்டி
பட்டை - 2” துண்டு
பிரியாணி இலை - 2
சீரகம் - 1 தேக்கரண்டி
கிராம்பு - 4
சிவப்பு மிளகாய் - 4
வெங்காயம் & தக்காளி விழுது அரைக்க
எண்ணெய் - 1 மேசைக்கரண்டி
பூண்டு - 5 பற்கள்
இஞ்சி - 1” துண்டு
வெங்காயம் - 2 நறுக்கியது
தக்காளி - 3 நறுக்கியது
கடாய் பன்னீர் செய்ய
வதக்கிய வெங்காயம் குடைமிளகாய்
வறுத்த பன்னீர்
அரைத்த மசாலா தூள்
வெங்காயம் & தக்காளி விழுது
எண்ணெய் - 1 மேசைக்கரண்டி
வெண்ணெய் - 1 மேசைக்கரண்டி
காஷ்மீர் மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி
உப்பு - தேவைக்கு ஏற்ப
தண்ணீர் - தேவைக்கு ஏற்ப
பிரெஷ் கிரீம் - 1 தேக்கரண்டி
கசூரி மேதி
செய்முறை
1. முதலில் ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி வெங்காயம் மற்றும் குடைமிளகாய் சேர்த்து 2 நிமிடங்கள் வதக்கி தனியாக எடுத்து வைக்கவும்.
2. அதே கடாயில் வெண்ணெய் சேர்த்து நறுக்கிய பனீரை போட்டு நன்கு பொன்னிறமாகும் வரை வறுத்து தனியாக எடுத்து வைக்கவும்.
3. அடுத்து மசாலா தூள் அரைக்க ஒரு கடாயில் எண்ணெய் இல்லாமல் தனியா, முழு மிளகு, பட்டை, பிரியாணி இலை, கிராம்பு, சீரகம், காய்ந்த மிளகாய் சேர்த்து வாசனை வரும் வரை வறுத்து வேறு பாத்திரத்திற்கு மாற்றி ஆற விட்டு மிக்ஸியில் போட்டு அரைத்துக் கொள்ளவும்.
4. அதே கடாயில் எண்ணெய் ஊற்றி பூண்டு, இஞ்சி, வெங்காயம், தக்காளி சேர்த்து நன்கு வதக்கி ஆறவிட்டு மிக்ஸியில் போட்டு விழுதாக அரைக்கவும்.
5. அடுத்து கடாய் பன்னீர் செய்ய, அதே கடாயில் எண்ணெய் மற்றும் வெண்ணெய் சேர்த்து அரைத்த வெங்காயம் தக்காளி விழுதை போட்டு அதனோடு சிறிது (மிக்ஸி கழுவி) தண்ணீர் ஊற்றவும். ஊற்றிய தண்ணீர் வற்றி மசாலா திரண்டு வரும் வரை வதக்கவும்.
6. அடுத்து இதில் அரைத்த மசாலா தூள், காஷ்மீரி மிளகாய்த்தூள், உப்பு சேர்த்து நிறம் மாறி எண்ணெய் பிரியும் வரை வதக்கவும்.
7. அடுத்து வதக்கிய வெங்காயம் குடைமிளகாய் சேர்த்து சிறிது தண்ணீர் ஊற்றி வேக வைக்கவும்.
8. எண்ணெய் பிரிந்தவுடன் வறுத்த பன்னீர் துண்டுகளை சேர்த்து கிளறவும்.
9. இறுதியாக கசூரி மேத்தி மற்றும் ஃப்ரெஷ் க்ரீம் சேர்க்கவும்.
10. கடாய் பனீர் தயார்.
#KadaiPaneer #PaneerRecipe #கடாய்பன்னீர்
You can buy our book and classes on www.21frames.in...
HAPPY COOKING WITH HOMECOOKING
ENJOY OUR RECIPES
WEBSITE: www.21frames.in...
FACEBOOK - / homecookingshow
KZitem: / ventunohomecooking
INSTAGRAM - / homecookingshow
A Ventuno Production : www.ventunotech...
Check out this link to buy products that are similar to what I use. Amazon Home Cooking Store - www.amazon.in/...
Негізгі бет Тәжірибелік нұсқаулар және стиль கடாய் பன்னீர் | Kadai Paneer Recipe in Tamil
Пікірлер: 138