#history #trending #kullarcave #trekking #thiruvannamalai #javaduhills
ஜவ்வாது மலையில் விவசாயம்தான் மூச்சு. இங்கு தினை, சாமை, தேன், வரகு, மிளகு என்று விவசாயம் ஜரூராக நடந்துகொண்டிருந்தது. 14 கி.மீ தொலைவில் மண்டப்பாறை, பட்டறைக் காடு, மலைக்கொள்ளை, வாளியம்பாறை என்று சில கிராமங்கள் உண்டு. இங்கேதான் குள்ளர் குகைகள் இருக்கின்றன. இவை குள்ள மனிதர்கள் வாழ்ந்ததற்கான வரலாற்றைச் சொல்கின்றன. வாளியர்கள் எனும் பெயர் கொண்ட அந்த இனத்தவர்களின் மொத்த உயரமே மூன்று அடிதானாம். கட்டடக் கலையும், இன்ஜினீயரிங் படிப்பும் இல்லாத காலத்திலேயே வெறும் பாறைகளைக் கொண்டு ‘ஏழைக்கேற்ற எள்ளுருண்டை’போல், தங்கள் உயரத்துக்கேற்ற கல் வீடுகளைக் கட்டிக் குடியிருந்ததற்கான அடையாளம் அது. பாறையைக் குடைந்தோ, மலையை உடைத்தோ இந்த வீடுகளைக் கட்டவில்லை அந்தக் கால குட்டி இன்ஜினீயர்கள்.
மலையில் இருக்கும் கற்களைப் பொறுக்கி அழகாக அடுக்கி, மேலே கூரை அமைத்து, குகைபோல் வீடு அமைத்துள்ளார்கள். குட்டிக் குட்டி சதுரப் பாறைகளுக்கு நடுவே ஒரு துளை; இதுதான் வாசல். வாசலில் ஒரு பெரிய பாறை. இதுதான் கதவு. அலிபாபா குகைபோல இதை மந்திரமெல்லாம் உச்சரிக்காமல், சும்மாவே திறந்து மூடிக்கொள்ளலாம். இங்கேதான் வாளியர்கள் எனும் குள்ளர் இனத்தைச் சேர்ந்தவர்கள் வாழ்ந்ததாகச் சொல்கிறார்கள். அதற்காகத்தான் வாளியம்பாறை என்று இந்த இடத்துக்குப் பெயரே வந்ததாகவும் வரலாறு சொல்கிறது. இயற்கைச் சீற்றங்களிலிருந்து தற்காத்துக்கொள்ள கொத்துக் கொத்தாகக் கற்களை அடுக்கி, பேஸ்மென்ட்டையும் கூரையையும் கெத்தாகக் கட்டியிருக்கிறார்கள் வாளியர்கள்.
************************
Copyright Disclaimer Under Section 107 of the Copyright Act 1976" If you would like to remove any clips or music I have used in this video, please send a email to liaste2911@gmail.com and your clips or music will be removed immediately. I have invested lot of time and efforts to raise this video and channel. Please don't give copyright strike, instead ask me to remove your clips or music or raise a copyright claim to get the advertisement revenue. I am happy to give the revenue to you. FAIR-USE COPYRIGHT DISCLAIMER**
************************
Негізгі бет குள்ள மனிதர்களின் வீடுகள் நிறைந்த ஜவ்வாதுமலை...
Пікірлер: 1,2 М.