மாரடைப்பிக்கான நெஞ்சு வலியை கண்டறிவது எப்படி ?
மாரடைப்பு போன்ற இதய நோய்களால் மக்கள் மிக அதிக அளவில் பாதிக்கப்படுகிறார்கள். மாரடைப்பும் நெஞ்சு வலியும் ஒன்றா? அது எப்படி இருக்கும்? அதன் அறிகுறிகள் என்னென்ன, அதை எப்படி கண்டுபிடிப்பது? என்பதைப் பற்றி மிக விளக்கமாக இதய சிகிச்சை நிபுணர் Dr. அருணாசலம் இந்த வீடியோவில் விரிவாக எடுத்துக் கூறுகிறார்.
நெஞ்சு வலி என்றால் பயப்படாதவர்கள் எவரும் இருக்க முடியாது. ஏனெனில் எந்த நெஞ்சுவலியானாலும் அதனை மாரடைப்பு என்றே பலரும் கருதுகிறார்கள்.
இதயத்தின் அறைகளுக்குள் எந்த நேரமும் இரத்தம் நிறைந்திருக்கிறது ஆனாலும் அதனை இயக்கும் தசைநார்களுக்கு அந்த இரத்தம் நேரடியாகக் கிடைப்பதில்லை.
இரண்டு சிறிய இரத்தக் குழாய்கள் - கொரனரி நாடிகள் (Coronary arteries) மூலமே கிடைக்கின்றன. இவை முடியுரு நாடிகள் எனப்படுகின்றன.
இவற்றில் ஒன்றில் அல்லது அவற்றின் கிளைகளில் இரத்தம் செல்வது தடைப்பட்டால் அப் பகுதியில் உள்ள இருதயத்தின் தசை நார்களுக்கு இரத்தம் போதிய அளவு கிடைக்காது.
அந்நிலையில் தசை நார்களுக்கு போதிய ஒட்சிசன் கிடைக்காது போய்விடும்.
இது நெஞ்சுவலியாக வெளிப்படும்.
அல்லது தசை நார்களுக்கு இரத்த ஓட்டம் அடியோடு தடைப்படலாம்.
அந் நிலையில் இப்பகுதியிலுள்ள தசைகள் இறந்துவிடவும் கூடும்.
மாரடைப்பின் அறிகுறிகள்
கடுமையான வலி திடீரென உங்கள் மார்பில் ஏற்பட்டால் அக்கறை எடுக்க வேண்டியது அவசியம்.
நெஞ்சை இறுக்குவதுபோல
அமுக்குவது போல,
பிழிவதுபோல,
அல்லது பாரம் ஏற்றியது போல இருந்தால் அது மாரடைப்பாக இருக்கலாம்
வலியானது பொறுக்க முடியாத கடுமையானதாக இருக்கும்.
இவ்வலி பெரும்பாலும் 20 நிமிடங்கள் அல்லது அதற்கு அதிகமாக நீடிக்கும்.
இவ்வலி பெரும்பாலும் நடுமார்பின் உட்புறத்தே ஏற்படும்.
வலி அவ்விடத்தில் மட்டும் மட்டுப்பட்டு நிற்காமல்
இடது தோள்மூட்டு,
இடதுகை, தொண்டை,
கழுத்து,
நாடி,
முதுகு போன்ற இடங்களுக்கும் பரவக் கூடும்.
Dr Arunachalam M.D., D.M., the Consultant Interventional Cardiologist at Aruna Cardiac Care, the Best Heart Care Centre in Tirunelveli, shared detailed information on Chest Pain in Tamil .
For more information :
Call : 0462-2574577 | 9487665577
--------------------------------------------------------------------------------------------------------------
Connect with us:
Facebook Page: / arunacardiacare
Instagram Page: / arunacardiaccare
Subscribe now: kzitem.info...
--------------------------------------------------------------------------------------------------------------
#arunacardiaccare #drarunachalam #bestcardiologist #besthospital #multispecilaityhospital #besthospitalintirunelveli #heartspecialist #heartspecialistintirunelveli #bestcardiacsurgeon #heartspecialistintirunelveli #firstaid #heartattack #hearttips #silentheartattack #symptomofheartattack #healthtips #heartattackintamil #heartblockintamil #exercise #heartexercise #hearthealthyfood #foodforheartpatients #hearthelathtips
#atrialseptaldefect #ventricularseptaldefect #congenitalheartdefects
Негізгі бет மாரடைப்பிக்கான நெஞ்சு வலியை கண்டறிவது எப்படி ? | Chest Pain in Tamil | Dr Arunachalam
Пікірлер: 20