#geminiganesan #padmini #tamilsongs #lovesongs #romantic #sadsongs #4koldsongs
மன நாட்டிய மேடையில் ஆடினேன் பாடல் | Mana Nattiya Medaiyil song | P. Susheela & A. M. Rajah . Tamil Lyrics in Description .
Movie : Meenda Sorgam
Music : T. Chalapathi Rao
Starring : Gemini Ganesan, Padmini
Song : Mana Nattiya Medaiyil
Singers : P. Susheela & A. M. Rajah
Lyrics : Kannadasan
பாடகர்கள் : பி. சுஷீலா மற்றும் ஏ. எம். ராஜா
இசையமைப்பாளர் : டி. சலபதி ராவ்
பெண் : ஹா……ஆஅ……ஆஅ…..ஆஅ…..ஆஅ….
ஹா……ஆஅ……ஆஅ…..ஆஅ…..ஆஅ….
பெண் : மன நாட்டிய மேடையில் ஆடினேன்
கலைக் காட்டிய பாதையில் வாடுகிறேன்
உயிர் காதலிலே உடல் மேடையிலே
இந்த வாழ்க்கையின் முடிவெங்கே
பெண் : மன நாட்டிய மேடையில் ஆடினேன்
கலைக் காட்டிய பாதையில் வாடுகிறேன்
பெண் : புவி வாழ்வினில் காதல் இன்பம்
அதில் ஏழையின் காதல் துன்பம்
புவி வாழ்வினில் காதல் இன்பம்
அதில் ஏழையின் காதல் துன்பம்
திருநாளும் இல்லை மண வாழ்வுமில்லை
இந்த வாழ்க்கையின் முடிவெங்கே…ஏ….
இந்த வாழ்க்கையின் முடிவெங்கே
பெண் : மன நாட்டிய மேடையில் ஆடினேன்
கலைக் காட்டிய பாதையில் வாடுகிறேன்
பெண் : வெறும் காவிய காதல் போலே
எந்தன் காதலும் ஆனதாலே
வெறும் காவிய காதல் போலே
எந்தன் காதலும் ஆனதாலே
உடல் வாழவில்லை உயிர் சாகவில்லை
இந்த வாழ்க்கையின் முடிவெங்கே…ஏ…..
இந்த வாழ்க்கையின் முடிவெங்கே
பெண் : மன நாட்டிய மேடையில் ஆடினேன்
கலைக் காட்டிய பாதையில் வாடுகிறேன்
ஆண் : வண்ணத் தாமரை பாவையின் தேகம்
கண்டு தழுவிடும் சூரியன் வேகம்
வண்ணத்தாமரை பாவையின் தேகம்
கண்டு தழுவிடும் சூரியன் வேகம்
தினம் மாறிவிடும் இருள் மூடி விடும்
இந்த வாழ்க்கையின் முடிவெங்கே
பெண் : இந்த வாழ்க்கையின் முடிவெங்கே
ஆண் : முடிவெங்கே
பெண் : முடிவெங்கே
பெண் : இந்த வாழ்க்கையின் முடிவெங்கே
ஆண் : இந்த வாழ்க்கையின் முடிவெங்கே
Негізгі бет Ойын-сауық மன நாட்டிய மேடையில் ஆடினேன் பாடல் | Mana Nattiya Medaiyil song | P. Susheela & A. M. Rajah .
Пікірлер: 33