1. மேகத்தில் இயேசு தோன்றிடுவார் மாசற்றோராய் சேர்த்திடவே மகிழ்ந்து அவரை சந்திப்போமே மகிமை நிறைந்த அந்நாளிலே வருவார் இயேசு வருவார் விரைந்து சீயோன் வேலையை முடித்தே ஆளுவோமே நாம் யுகாயுகங்களாய் அல்லேலூயா இன்ப இயேசுவுடன் 2. காகள நாதம் முழங்கவே காண்போம் நாதன் பொன் முகமே கண்ணிமைதனில் மாறுவோமே கர்த்தன் இயேசின் ரூபமதாய் 3. பாடுகள் நிந்தை சோதனைகள் யாவும் இகத்தில் அடைந்தோரெல்லாம் மறந்து யாவும் நிறைந்த அன்பில் மறைந்திடுவார் இயேசுவிலே 4. அவர் தாம் தரும் நல் பிரதிபலன் அவருடனே வருமத்தினத்தில் ஜெயங்கொண்டோரே சிங்காசனமே சுதந்தரிப்பார் அந்நாளிலே 5. ஆவியும் நேயர் மணாளியும் ஆவலுடனே வாரும் எனவே அழைக்கும் சத்தம் கேட்டிடுதே ஆமென் வாரும் இயேசுவே
@samuelgnanadasan8362
3 жыл бұрын
Lord Jesus Christ Is Coming Soon, Soon and Sooner Than We Think 🙏 Praise The Lord 🙏 Amen 🙏
Пікірлер: 8