ஸ்ரீமத் பாம்பன் ஸ்வாமிகள் அருளிய
சண்முக நாமாவளி
ஹரஹரசிவசிவ சண்முகநாதா
ஹரஹரசிவசிவ வென்முகநாதா
ஹரஹரசிவசிவ பரமவிலாசா
ஹரஹரசிவசிவ வபயகுகேசா
அருணகிரிபரவு மருணெறிநாதா
தருமவறுவர்புகழ் சததளபாதா
அரிபிரமாதிக டொழுவடிவேலா
திருவடிநாரவ ருளமுறைசீலா (ஹரஹரசிவசிவ)
எனினியகுருநித மெணுமதியீசா
சனனவெய்தறவளி தருபரமேசா
பாசாபாச பாபவிநாசா
மாசேறாத மானநடேசா (ஹரஹரசிவசிவ)
போஜாவாஜா பூஜகர்நேசா
தேஜாராஜா தேவஸமாஜா
தீஞ்சுவையருளொரு திருவாரமுதே
ஓஞ்சரவணபவ வுருவேயருவே. (ஹரஹரசிவசிவ)
... ஸ்ரீ சண்முக நாமாவளி முற்றிற்று.
Негізгі бет முருகனை தினமும் பூஜிக்க | சண்முக நாமாவளி | Shanmugha Namavali | ஸ்ரீமத் பாம்பன் ஸ்வாமிகள் அருளியது
Пікірлер: 17