கொட்டாம்பட்டி அருண் பற்றி கூற வேண்டும் என்றால், எனக்கும் அவருக்குமான உறவு 7 ஆண்டுகளுக்கும் மேலானது. நல்ல நண்பர். எதையும் வெளிப்படையாக பேசுபவர். மற்றவர்களுக்கு மிகுந்த மரியாதை கொடுப்பவர். ஹலோ மதுரை மாத இதழில் அவரது கோழிப் பண்ணை குறித்து 2017ல் ஒரு கட்டுரை எழுதும் வாய்ப்பு கிடைத்தது.
அருண் விவசாயத்தில் மிகுந்த ஈடுபாடு கொண்ட இளைஞர். விவசாயிகளுக்கு குரல் கொடுக்க ஒருபோதும் தயங்குவதில்லை. சிறந்த உழைப்பாளி, எதையும் எளிதாக புரிந்து கொள்ளும் அறிவாளி. எனக்கும் அவருக்கும் ஒரு மெல்லிய சுவர் நிச்சயமாக உள்ளது. கொள்கைகள் வேறு வேறு என்றாலும், குரல் என்னமோ ஒன்றுதான்.
நம்மாழ்வாரின் மாணவர் என்ற வார்த்தையை அருண் எப்பொழுதும் தன் உதடுகளில் இருந்து உதிர்த்துக் கொண்டே இருப்பார். அது அவரை தூய்மைபடுத்திக் கொண்டே இருக்கும் மந்திரம் என்றே நான் நம்புகின்றேன். பச்சை துண்டு அணிவதில் எங்களுக்குள் ஒரு போர் கொடி இல்லாமல் இல்லை. இருந்தபோதும் அவரது நேசிப்பை நான் நிச்சயமாக மதிக்கின்றேன். அவர் இன்னும் புகழ் உயரத்தை தொட வேண்டும் என்பதே எனது அவா.
சரி அவரது கோழி பண்ணைக்கு வருகின்றேன். முதல் முறையாக பேட்டி எடுக்கும் பொழுதே மனதுக்கு நெருக்கமாகி விட்டார். கோழிக்காக நிறைய மெனக்கடல் அவரிடம் உண்டு. பணத்தை பார்க்காமல் நேர்த்திக்காக எந்த தூரம் செல்லும் திறன் படைத்தவர். அவரது பண்ணை அமைப்பை பார்த்து நான் ஒவ்வொரு முறையும் வியப்பேன். புதிய புதிய முயற்சிகளுடன் தொழில்நுட்பங்களைச் செய்ய அவர் ஒருபோதும் தயங்குவதில்லை.
இந்த வீடியோ பதிவில் கூட குஞ்சு வளர்ப்பு பிரிவில் மின் ஒளிகளை பொருத்திய நேர்த்தி எனக்கு அவ்வளவு பிடித்திருந்தது. அதை பார்த்துக் கொண்டே இருக்கலாம். அவவ்ளவு அழகு. அதை விட அந்த குஞ்சுகள் அப்படி ஒரு ஈர்ப்பு. அவரது பண்ணையில் ஒரு கோழி உள்ளது. அதன் கழுத்து தலை கீழாக சுற்றிக் கொண்டே இருக்கும். ஏதோ சீக்காம். ஆனாலும் அதை கொல்ல மனமின்றி குஞ்சில் இருந்தே தனியாக தீவனம் போட்டு வளர்த்து வருகின்றார். அந்த ஈரம் தான் அருணை எல்லோருக்கும் பிடிக்க காரணம்.
பண்ணை தற்போது வேறு கோணத்தில் மாறி இருந்தது. இன்னுமு் ஒரு மாததத்தில் பண்ணை முழுமையாக மாறிவிடும். புதிய ஏற்பாடுகளை செய்ய ஆரம்பித்துள்ளார். ஊரடங்கு தளர்வுக்கு பிறகு அவரது வார்த்தையில் நிறைய நம்பிக்கைகள் தெரிந்தது. முன்பை விட தெளிவான பேச்சு எனக்கு மகிழ்ச்சியை அளித்தது. பேட்டியை வழக்கம்போல் எடுத்துவிட்டு, அம்மாவிடம் கூறிவிட்டு அங்கிருந்து நானும், கேமரா மேனும் கிளம்பினோம்.
பேட்டி முடிந்த உடன் வழக்கம்போல் சாப்பிட கடைக்கு கூட்டிச் சென்றார். நாம் சென்ற வேளை கடை திறக்கவில்லை. வேலை உள்ளது. நீங்கள் கடைக்கு சென்று சாப்பிடுங்கள், தவறாக நினைத்துக் கொள்ளாதீர்கள் கூட இருந்து கவனிகக் முடியவில்லை என்று பலமுறை கூறிவிட்டு எனது சட்டை பையில் ரூ.1000 வைத்துவிட்டார். எவ்வளவோ கூறியும் அதை வாங்க மறுத்துவிட்டார்.
நானும், கேமரா மேனும் ஒரு வெட்டு வெட்டி விட்டு, பைக்கில் பெட்ரோலை நிரப்பிவிட்டு, மதுரை வந்தடைந்தோம். அருண் எப்பொழுதுமே கடை சாப்பாடு மட்டுமே போட்டுக் கொண்டிருக்கின்றார். கல்யாண சாப்பாடு எப்போது போடுவார் என்று அவரது அம்மாவைப்போல் நானும் ஆவலோடு காத்துக் கொண்டு இருக்கின்றேன்.
பண்ணை குறித்து வீடியோவில் தெரிந்து கொள்ளுங்கள். இங்கு அருணின் பண்பை மட்டுமே இங்கு பதிவு செய்துள்ளேன். வேறு ஒரு பயண அனுபவத்தில் உங்களை சந்திக்கின்றேன். நீங்களும் அருணை தொடர்பு கொண்டால் இந்த நேசம் வழுவாமல் உங்களுக்கும் கிடைக்கும் நிச்சயமாக என்று முடிக்கின்றேன்.
நன்றிகள்.
அருண் தொடர்பு எண்: 8883939399.
________________________________________________________
உங்கள் தொழில் சார்ந்த வீடியோக்கள் எடுக்க நீங்கள் எங்களை அழைக்க வேண்டிய அலைபேசி எண்:
Hello Madurai M.Ramesh - 95 66 53 1237. (Whatsapp)
_________________________________________________________
மேலும் எங்களது Hello Madurai App எனும் பிரத்யேக செயலியை கூகுல் பிளே ஸ்டோரில் இலவசமாக பதிவிறக்கம் செய்து எங்கள் வீடியோக்கள் உள்பட ஒட்டுமொத்த மதுரையையும் உள்ளங் கையில் வைத்துக் கொள்ளலாம்.
💓 App Link: play.google.com/store/apps/de...
💓 Facebook : / maduraivideo
💓web site : hellomaduraitv.com/
💓web site : hellomadurai.in/
💓web site : tamilvivasayam.com/
💓 Telegrame Link: t.me/hellomadurai
_________________________________________________________
#கோழிபண்ணை #நாட்டுகோழி #கோழிகுஞ்சு #நாட்டுக்கோழிபண்ணை #நாட்டுகோழிகுஞ்சு #நாட்டுக்கோழிமுட்டை #நாட்டுக்கோழிகறி #நாட்டுக்கோழிவளர்ப்பு #கருங்காலிகோழி #பெருவிடைகோழி #சிறுவிடைகோழி #முட்டைகோழி #நாட்டுக்கோழிவளர்ப்பு #நாட்டுக்கோழிகுஞ்சுவிற்பனை #நாட்டுக்கோழிதீவனம் #நாட்டுக்கோழிமருத்துவம் #நாட்டுக்கோழிபயணம் #நாட்டுக்கோழிபண்ணைஅமைப்பு #நாட்டுக்கோழிபண்ணைதோற்றம் #நாட்டுக்கோழிபண்ணைபராமரிப்பு #நாட்டுக்கோழிபண்ணைபயன்கள்
#poultry #chickens #chicken #backyardchickens #chickensofinstagram #poultryofinstagram #backyardpoultry #hens #eggs #farmlife #farm #crazychickenlady #petchickens #hensofinstagram #chooks #poultryfarm #poultryfarming #freerangechickens #chickenlife #homestead #chickensofig #chickenlove #birds #hen #chicks #rooster #chickencoop #pets #happyhens
#chicken #food #foodie #foodporn #foodphotography #instafood #foodstagram #yummy #delicious #foodblogger #dinner #foodlover #homemade #bbq #lunch #tasty #chickensofinstagram #foodgasm #foodies #beef #healthyfood #cooking #love #chickens #chickenrecipes #indianfood #foodiesofinstagram #instagood #meat #bhfyp
Негізгі бет Үй жануарлары мен аңдар நாட்டுக் கோழி குஞ்சு பண்ணை | சிறுவிடை | பெருவிடை | கடக்நாத் | அசில் | Poultry farming | Chick farm
Пікірлер: 9