காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தியின் பேச்சில் தொழிலதிபர்கள் அதானி, அம்பானி ஆகியோரின் பெயர்கள் இடம்பெறுவது வழக்கமான ஒன்றுதான். ஆனால், பிரதமரான பின்னர் முதன்முறையாக காங்கிரஸை விமர்சிக்க அதானி, அம்பானியின் பெயர்களை நரேந்திர மோதி பயன்படுத்தியிருக்கிறார்.
தெலங்கானாவில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்ட பிரதமர் நரேந்திர மோதி, `காங்கிரஸின் இளவரசர் அண்மை காலமாக அதானி, அம்பானி குறித்து பேசாமல் மௌனமாக இருப்பது ஏன் என காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி குறித்து விமர்சித்துள்ளார்.
இதற்கு பதிலளித்துள்ள ராகுல் காந்தி, ` முதல்முறையாக அதானி, அம்பானி குறித்து பொதுவெளியில் பேசியுள்ளீர்கள். ஒன்று செய்யுங்கள், சிபிஐ, அமலாக்கத்துறையை அவர்களிடம் அனுப்புங்கள். முழு தகவலைகளை பெறுங்கள், விசாரணை நடத்துங்கள். எவ்வளவு விரைவாக முடியுமோ அவ்வளவு விரைவாக இதை செய்யுங்கள். பதற்றமாக இருக்கிறீர்களா? மோதி ஜி என கேள்வி எழுப்பியுள்ளார்.
#Modi #Adani #Ambani #Congress
இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
Subscribe our channel - bbc.in/2OjLZeY
Visit our site - www.bbc.com/tamil
Facebook - bbc.in/2PteS8I
Twitter - / bbctamil
Негізгі бет “பதற்றப்படாதீங்க Modi Ji...”; மோதியின் அதானி அம்பானி பேச்சுக்கு ராகுல் பதிலடி | Modi Speech
Пікірлер: 507