Song :Ponguthea Aanandham
Singer :Bro.Roshan David
Music :Isaac.D
Keba Jeremiah
Abin Paul
Video&Editing:
Bro.M.B.Paul David,C.P.H Akkur
பொங்குதே ஆனந்தம் - புவி
எங்குமே இல்லா பேரானந்தம்(2)
(1)
வையகம் தந்திட இன்பம்
இயேசு ஐயனளித்த ஆனந்தம்(2)
பொய்யனுக்கோ புகழ வொண்ணா நாசம்
மெய்யனகற்றினார் என் பாவ தோஷம்(2)
(2) ...பொங்குதே ஆனந்தம்
பரலோக மேன்மை துறந்து
நரலோகமானிடனாய் பிறந்து(2)
எவர்க்குமேகிடையாத சிலாக்கியம்(2)
பரமனை நம்புவோர்க்களித்தார் நல்பாக்கியம்(2)
(3) ...பொங்குதே ஆனந்தம்
குருசினில் சிந்தின இரத்தம்
குரு இயேசுவில் உண்டான சுத்தம்(2)
கல்வாரியில் தெய்வமகத்துவ நேசம்(2)
கல்லான இதயமும் களிந்திடும் பாசம்(2)
(4) ...பொங்குதே ஆனந்தம்
பாவ பரிகார நாமம் -கொடும்
ரோகப்பரிகார நாமம்(2)
சர்வ லோகத்திலும் மேலான நாமம்(2)
சர்வஜனத்திற்கும் இரட்சண்ய நாமம்(2)
...பொங்குதே ஆனந்தம்
Негізгі бет பொங்குதே ஆனந்தம் ||Bro.Roshan David song||Tamil Christian song 2019
Пікірлер: 6