சங்கீதம் 104:33
நான் உயிரோடிருக்குமட்டும் என் கர்த்தரைப் பாடுவேன்; நான் உள்ளளவும் என் தேவனைக் கீர்த்தனம்பண்ணுவேன்.
போற்றித் துதிப்போம் எம் தேவ தேவனை
புதிய கிருபையுடனே
நேற்றும் இன்றும் என்றும் மாறா இயேசுவை நாம்
என்றும் பாடித் துதிப்போம்
இயேசு என்னும் நாமமே
என் ஆத்துமாவின் கீதமே
என் நேசரேசுவை நான் என்றும்
ஏற்றி மகிழ்ந்திடுவேன்
கோர பயங்கரமான புயலில்
கொடிய அலையின் மத்தியில்
காக்கும் கரம்கொண்டு மார்பில் சேர்த்தணைத்த
அன்பை என்றும் பாடுவேன்
தாய் தன் பாலகனையே மறப்பினும்
நான் மறவேன் என்று சொன்னதால்
தாழ்த்தி என்னையவர் கையில் ஈந்து ஜீவ
பாதை என்றும் ஓடுவேன்
Music Credits: Servants of God
Edits: Trumpet Studios
Негізгі бет Музыка POTRI THUTHIPOM EM DEVA | போற்றித் துதிப்போம் எம் தேவ தேவனை | LYRICAL VIDEO | TAMIL CHRISTIAN SONG |
Пікірлер: 7