ஏறமுடியாதவனை கண்டானாம், ஏணி பந்தயம் வச்சானாம் என்று இடக்கு பண்ற கிரகம் எது தெரியுமா? சனி பகவான் இல்லை. அவரெல்லாம் தங்கத்தின் தங்கம். அந்த பெருமைக்கு உரியவர் ராகு. என்னதான் யோகக்காரகன் என்று பெயரை வைத்திருந்தாலும், சமயம் கிடைச்சா சந்தடி சாக்கில் சிந்து பாடுவதில் ராகு கில்லாடி. அதாவது பிறப்பு ஜாதகத்த்தில். அதற்கு மேல் .. தனிப்பட்ட முறையில் தினசரி.. ஒன்னரை மணி நேரத்தை தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பார். அதற்கு பெயர் ராகு காலம் என்று பெயர். ராகுகாலத்தைப் பற்றி அதிகம் சொல்ல வேண்டியதில்லை. சுபகாரிய விலக்கு பெற்ற நேரம். கோவிலில் புகுந்து கொள்ளையடிக்கிறவன் குருக்களுக்கா தட்சணை தரப்போகிறான் என்கிற மாதிரி, உட்காரும் இடத்தில் ஊசிப்பதிக்கிற ராகு பிறப்பு ஜாதகத்தில் பலம் பெற்றிருந்தாலும், யோகநிலையில் இருந்தாலும் ராகுகாலம் பாதிக்காது என்றும், ராகுவின் சுய நட்சத்திரங்களான திருவாதிரை, சுவாதி, சதயம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு ராகுகாலப் பாதிப்புகள் இருக்காது என்கிற கருத்தும் இருக்கிறது. இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தங்கள் அனுபவ உண்மையை பகிர்ந்து கொண்டால் மற்றவர்களுக்கும் பயன்தரும்.
- 6 жыл бұрын
ராகு கால ரகசியங்கள் | நலம் தரும் ராகு காலம் | Ragu Kalam | Thamizhan Mediaa
- Рет қаралды 155,519
Пікірлер: 150