#geminiganesan #tamilsongs #oldsongs #lovesongs #kannadasan #romantic #4koldsongs
ஊரெங்கும் தேடி ஒருவரை கண்டேன் பாடல் | Oorengum Thaedinaen song | Jikki | A. M. Rajah . Tamil Lyrics in Description .
Movie : Thennilavu
Music : A. M. Rajah
Starring : Gemini Ganesh, Vyjayanthimala
Song : Oorengum Thaedinaen
Singers : Jikki
Lyrics : Kannadasan
பாடகி : ஜிக்கி
இசை அமைப்பாளர் : ஏ. எம். ராஜா
பெண் : ஊரெங்கும் தேடி
ஒருவரை கண்டேன்
ஊரெங்கும் தேடி
ஒருவரை கண்டேன்
அந்த ஒருவரிடம் தேடி
என் உள்ளத்தை கண்டேன்
ஊரெங்கும் தேடி
ஒருவரை கண்டேன்
பெண் : உள்ளமெங்கும் தேடினேன்
உறவினை கண்டேன்
அந்த உறவினிலே மூழ்கினேன்
பிரிவினை கண்டேன்
ஊரெங்கும் தேடி
ஒருவரை கண்டேன்
பெண் : {கைகொடுத்த தெய்வம் இன்று
எங்கு சென்றதோ
என்னை காத்திருக்க வைத்துவிட்டு
எங்கே நின்றதோ} (2)
பெண் : இன்று கண்கலங்க
நின்றிருந்தேன் சேதி வந்தது
நான் கடந்து வந்த வானில்
விடிவெள்ளி முளைத்தது
ஊரெங்கும் தேடி
ஒருவரை கண்டேன்
பெண் : {காண வந்த மாளிகையின்
கதவு திறந்தது
பெரும் கருணையோடு
அருள் விளங்கும் கண் திறந்தது} (2)
பெண் : ஆற்று வெள்ளம் போல
நெஞ்சின் மடை திறந்தது
நல்ல அமர தீபம் போல
வாழ்வில் ஒளி பிறந்தது
ஊரெங்கும் தேடி
ஒருவரை கண்டேன்
பெண் : {தாழ்வினிலும் வாழ்வினிலும்
உங்கள் கையிலே
என் சஞ்சலமும் நிம்மதியும்
உங்கள் சொல்லிலே} (2)
பெண் : வாழ்க என்று நீங்கள்
சொன்னால் வாழும் என் மனம்
வாழ்க என்று நீங்கள்
சொன்னால் வாழும் என் மனம்
இல்லை மறைக என்று வரம்
கொடுத்தால் மறைய சம்மதம்
ஊரெங்கும் தேடி
ஒருவரை கண்டேன்
பெண் : ஊரெங்கும் தேடி
ஒருவரை கண்டேன்
அந்த ஒருவரிடம் தேடி
என் உள்ளத்தை கண்டேன்
ஊரெங்கும் தேடி
ஒருவரை கண்டேன்
Негізгі бет ஊரெங்கும் தேடி ஒருவரை கண்டேன் பாடல் | Oorengum Thaedinaen song | Jikki | A. M. Rajah .
Пікірлер: 37