நெஞ்சு சளி சரியாக தூதுவளை துவையல்
தேவையான பொருட்கள்
தூதுவளை இலை - ஒரு கைப்பிடி
உளுந்து - 2 ஸ்பூன்
தேங்காய் துருவல் - நாலு ஸ்பூன்
புளி - சின்ன நெல்லிக்காய் அளவு
பூண்டு - 4 பல்
காய்ந்த மிளகாய் - 5
நல்லெண்ணெய் - 4 ஸ்பூன்
தாளிப்பதற்கு - கடுகு உளுந்தம் பருப்பு சிறிதளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை
தூதுவளை இலையை முள் நீக்கி சுத்தம் செய்து கொள்ளவும்.
ஒரு கடாயில் 2 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி உளுந்தம் பருப்பு,காய்ந்த மிளகாய் போட்டு நன்கு வறுத்து அதனுடன் தூதுவளை இலை ,தேங்காய் துருவல் ,புளி, பூண்டு ,உப்பு சேர்த்து நன்கு வதக்கி ஆறவைத்து கொஞ்சமா தண்ணீர் சேர்த்து மிக்ஸியில் நன்கு அரைத்து ஒரு கிண்ணத்தில் எடுத்து வைத்துக் கொள்ளவும்.
பின்பு தாளிக்கும் கரண்டியில் ரெண்டு ஸ்பூன் எண்ணெய் ஊற்றி கடுகு ,உளுந்தம் பருப்பு போட்டு தாளித்து அரைத்த துவையலில் சேர்த்தால் சுவையான தூதுவளை துவையல் ரெடி
தூதுவளை துவையல் | Thoothuvalai thuvaiyal | Samayalkurippu | Samayal in Tamil | Samayal Kurippu in Tamil
தூதுவளையை நன்கு அரைத்து அடை போல் செய்து சாப்பிட்டு வந்தால் தலையில் உள்ள கபம் குறையும்.
காது மந்தம், இருமல், நமைச்சல் பெருவயிறு மந்தம் போன்றவற்றிற்கு தூதுவளைக் கீரை சிறந்த மருந்தாகும்.
மூக்கில் நீர் வடிதல், வாயில் அதிக நீர் சுரப்பு, பல் ஈறுகளில் நீர்சுரத்தல், சூலை நீர், போன்றவற்றிற்கு தூதுவளைக் கீரை சிறந்த மருந்து.
தூதுவளையுடன் மிளகு சேர்த்து கஷாயம் வைத்து குடித்தால் வறட்டு இருமல் குறையும்
Nenju sali Neenga, Home Remedy for Cold in Tamil, sali thollai neenga kulanthaiku sali,nenju sali home remedies, thondai sali, sali irumal home remedies, sali irumal neenga, சளி கரைய, kulanthaiku patti vaithiyam, patti vaithiyam in tamil for cold
For More Recipes Visit samayalkurippu....
Download Samayal kurippu android App goo.gl/1tlqCq
Follow us on Twitter goo.gl/5Gq4B7
Follow us on Facebook goo.gl/NQFN5s
Follow us on blogspot goo.gl/CWdapK
Негізгі бет தூதுவளை துவையல் | Thoothuvalai thuvaiyal | Samayalkurippu | Samayal in Tamil
Пікірлер: 130