#MobileNumberOfPoojari9943610705 #தேவர்மலை #தேவர்மறி #கதிர்நரசிங்கபெருமாள் #Devarmalai #KathirNaraSingaPerumal
ஹிரண்யனை வதம் செய்த பின்னரும் சினம் தணியாமல் சீறி அலைந்த நரசிம்மரை தேவர்கள் ஆசுவாசப்படுத்தி அமர வைத்து மோட்ச தீர்த்தம் ஏற்படுத்தி திருமஞ்சனம் செய்து சினம் தணித்தார்கள் என்கிறது தேவர்மலை என்றழைக்கப்படுகின்ற தேவர்மறி கதிர் நரசிங்க பெருமாள் திருத்தல புராணம் இத்திருத்தலத்தினைப் பற்றியே இந்த வலையொலியில் காண்கிறீர்கள்
நரசிம்மருக்கு திருமஞ்சணம் செய்வதற்காக தேவர்களால் தோற்றுவிக்கப்பட்ட மோட்ச தீர்த்தம் இத்திருத்தலத்தின் வடமேற்கு பகுதியிலே கலைநயத்துடன் கட்டப்பட்ட தீர்த்தக் குளமாக காட்சி தருகிறது ஆகாச தீர்த்தம் பிரம்ம தீர்த்தம் என்று அழைக்கப்படுகின்ற இத் தீர்த்தத்தில் மூழ்கி எழுந்தால் தங்களது பாவங்கள் அனைத்தும் நீங்கி விடும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது
பெரிய கதவுகளுடன் கற்களை அடுக்கிக் கட்டப்பட்ட பிரமாண்ட நுழைவாயில் மொட்டை கோபுரத்தில் காணப்படுகிறது கட்டுமானங்கள் முழுமை பெறாமலேயே மொட்டை கோபுரங்களாக இருக்கும் இராயர் கோபுரங்கள் என்றழைக்கப்பட்ட இவ்வகை கோபுரங்களின் கட்டுமானங்கள் திருமலை நாயக்கர் காலத்தில் தொடங்கப்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கது
கருவறையில் சூரிய ஒளிச் சுடராய் விளங்கும் கதிர் நரசிம்மர் இடதுகாலை மடித்து ஜெய வீர ஆசன நிலையில் அமர்ந்து இடது கை அஹ்வான முத்திரையினையும் வலது கை அபயஹஸ்த முத்திரையினையும் கொண்டு இறைவன் பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார் இறைவனின் மேல் இரண்டு கைகள் சங்கு மற்றும் சக்கரம் ஆகியவற்றைக் கொண்டுள்ளன மூலவர் தனது நெற்றியில் மூன்றாவது கண் கொண்டுள்ளார். இது ஓர் அரிய வெளிப்பாடு எனக் கருதப்படுகிறது
மூலவர் சன்னதிக்கு தெற்குப் புறமாக தனி தீபஸ்தம்பத்துடன் கூடிய சன்னதியில் கமலவல்லி தாயார் பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார்
1000 ஆண்டுகள் பழமை வாய்ந்த மூலவரைக் கொண்ட இந்த ஆலயத்தினை பாண்டியர்களும் சுமார் 500 ஆண்டுகளுக்கு முன்பு இப்பகுதியின் பாளையக்காரர்களாக விளங்கிய சாமைய நாயக்கரின் வம்சாவளியினரும் புனரமைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது
இவ்வளவு சிறப்புகள் கொண்ட இத்திருக்கோயில் கரூரிலிருந்து தெற்கு திசையில் 35 கிலோ மீட்டர் தொலைவில் கரூர் - திண்டுக்கல் மாவட்ட எல்லையில் அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
இக்கோயிலின் பட்டாச்சாரியர் திரு பாலாஜி ஐயங்கார் [Balaji Iyyengar] அவர்களின் தொடர்பு எண் [Contact Mobile No] 99436 10705
Location Map: goo.gl/maps/JkzFCQnyj2mxtgFw7
Video Chapters
00:00 - Channel Intro Teaser
00:17 - Title - Devarmari
00:25 - Intro about Mahavishnu’s Avatars
01:29 - About Maksha Theertham
02:39 - Muniyandi’s speech about Maksha Theertham .
04:10 - Nagar Temple
04:28 - Rayar Tower
04:44 - Dheeba Pillars
04:59 - 6 Piilared Mandaba with Flag post
05:10 - Garuda Alwar Temple
05:13 - Maha Mandaba
05:23 - Sanctum Sanctorum and Deity
05:47 - Kamala Valli Thayar Temple
06:10 - Balaji Iyyankar’s Speech about Devarmari Temple
18:18 - Boomi Narayana Perumal
19:17 - Outro
19:48 - Credits
Негізгі бет தேவர்மறி / தேவர்மலை (கரூர் மாவட்டம்) கதிர் நரசிம்ஹர் || DEVARMARI / DEVARMALAI KATHIR NARASIMHAR
Пікірлер: 47