சந்தியாகப்பர் பாடல்
சரணம் சரணம்
ஈசனே
சர்வம் காக்கும்
நேசனே
மெய்ப்பரன் நாயகரே
தற்பரன் காவலரே
இயேசுவே சமர்ப்பணமே
தொகையறா
+++
எங்கள் அன்பின் காவலரே
சந்தியாகப்பரே,
எம் குரல் கேட்டு
எம் குறை தீர்க்க
உம்மையே வேண்டி வந்தோம்
வரம் வாங்கித் தாருமே
பல்லவி
+++
வெண்ணிறக் குதிரையின் வித்தகரே
சந்தியாகப்பரே
இறைமகன் இயேசுவின் இனியவரே
சொந்தமானவரே
படைதனை மிரட்டி, எதிரியை விரட்டி
காவல் நிற்பவரே
வாளினை நீட்டி, வெற்றியை நாட்டி
வாழ வைப்பவரே
சந்நிதி வந்தோம், எங்கள்
சந்தியாகப்பரே
வந்தனம் தந்தோம், எங்கள்
சந்தியாகப்பரே
*
RAP - 1
+++
புதுப் புது
புதுமைகள் புரிபவா
தினம்
அருள் மழை
அருகினில் திரிபவா
இடியவன்
மகனென அறிந்தவா
உம்
இடையினில்
உடைவாள் அணிந்தவா
திரியில் தெரியும்
ஒரு வெளிச்சமா
தாய்
மரியின் அருகில்
தினம் முளைத்தவா
வரங்கள் புரியும்
இரு கரங்களால்
அருள்
சரங்கள் தினமும்
எமக் களிப்பவா
சேன் டியாகோ எனும் பெயர்
எம்
சந்தியாகப்பர் திருப்பெயர்
Saranam 1
+++
இறைமகன் இயேசுவின் பயணம் முழுதும்
நிழலாய் நீயும் சென்றாய்
மறையா வாக்கின் விசுவா சத்தின்
நிறைவாய் நீயும் நின்றாய்
உலகம் முழுதும் மறையைப் பரப்ப
கடலைத் தாண்டிச் சென்றாய்
இறைவன் பணிக்கே உயிரைத் தந்து
இரத்த சாட்சியும் ஆனாய்
அன்னை வாழும் காலம் தனிலே
காட்சிகண்டவரே
மாதா கோயில் முதலில் கட்டியே
மாட்சி கொண்டவரே
அன்னை சொன்ன வார்த்தை தன்னை
நெஞ்சில் கொண்டவரே
அன்னை சொன்ன வாக்கின் படியே
ஜீவன் தந்தவரே
Rap 2
+++
அனுதின
அனுதினம் அதிசயம்
மனம்
இனிதென
இனிதென ஒருசுகம்
பலப்பல
பதிலடிப் பரவசம்
உம்
பளபள
வாளினில் ஒளிவரும்
திரும்ப திரும்பத்
வரும் புதுமழை
மனம்
விரும்ப விரும்ப
வரும் அருள்மழை
அகல அகல
மனம் அழைக்குதே
உனை
விலக விலக
உயிர் வலிக்குதே
நினைக்க வேண்டும் தினம் தினம்
நீர்
வழங்க வேண்டும் இறை வரம்
Saranam 2
+++
ஸ்பெயினை இறைவன் அன்பின் நிழலில்
அழகாய் கொண்டு வந்தாய்
தடைகள் கோடி நெருங்கிய போதும்
தலைவன் வழியில் சென்றாய்
இடியின் மகனாய் வெடிக்கும் நீயும்
குழந்தை போலே ஆனாய்
புதுமை புரியும் புதல்வன் நீயும்
நாட்டின் காவலன் ஆனாய்
இறைவன் அருகில் அமரும் வரத்தை
வேண்டிக் கொண்டவரே
இல்லை என்றே சொன்ன போதும்
அண்டிச் சென்றவரே.
உடலின் மீதில் ஆலயம் கண்ட
சந்தியாகப்பரே
இறைவன் அருளை பெற்றே தாரும்
எங்கள் நாயகரே
Негізгі бет TAMIL CHRISTIAN DEVOTIONAL/MARIAN/DR.XAVIEE/MARK ANTONY/SARAVANA GANES/ சந்தியாகப்பர் பாடல்
Пікірлер: 92