தர்மபுரி கடைவீதி பகுதி அருகேஸ்ரீ ஆதிசங்கரர் ஜெயந்தி விழா முன்னிட்டு ஆதிசங்கரர் ஸ்வாமி திருவீதி விழா நடைபெற்றது
தர்மபுரி ஸ்ரீ சங்கர ஜெயந்தி கமிட்டி சார்பில் ஸ்ரீ ஆதிசங்கரர் ஜெயந்தி விழா சத்திரம் தெருவில் உள்ள அருணாச்சல ஐயர் சத்திரத்தில் கடந்த 6ம் தேதி சாம்ப பரமேஸ்வர பூஜை, ருத்ரத்ரிசதி அர்ச்சனை, சிவபுராண பாராயணத்துடன் துவங்கியது.முக்கிய நாளான இன்று காலை 10 மணியளவில் ஸ்ரீ ஆதிசங்கரர் திருவீதி உலா சத்திரத்தில் இருந்து புறப்பட்டு சீனிவாசராவ் தெரு, கடைவீதி, அக்ரஹாரத்தெரு வழியாக சத்திரத்தை அடைந்தது. காலை 11 மணியளவில் விசேஷ பூஜைகள், அர்ச்சனைகள் நடந்தது. பகல் 12 மணியளவில் மந்திர புஷ்பம், உபச்சாரங்கள், மகா தீபாராதனை நடந்தது.விழாவிற்கான ஏற்பாடுகளை விழாக்கமிட்டி தலைவர் சாய்ராம், சீனிவாசன் உள்ளிட்ட குழுவினர் செய்திருந்தனர்.
=
Негізгі бет தர்மபுரி கடைவீதி பகுதி அருகேஸ்ரீ ஆதிசங்கரர் ஜெயந்தி விழா
Пікірлер