முதுமையை தள்ளிப்போடும். இளமையாக இருக்க உதவும் நெல்லிக்காய் ஒரு வரப்பிரசாதமே. ஒரு நெல்லிக்காய் மூன்று ஆப்பிள்களுக்குச் சமம். ஒரு சின்ன நெல்லிக்காயில் 600 மில்லி கிராம் வைட்டமின் சி இருக்கிறது. தினமும் ஒரு நெல்லிக்காய் உண்டுவந்தால், சர்க்கரைக் குறைபாட்டைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துவிடலாம். அதிக உடல் பருமனால் கஷ்டப்படுகிறவர்கள் காலையில் வெறும் வயிற்றில் நெல்லிக்காய்ச் சாறுடன் இஞ்சிச் சாறு அருந்திவந்தால் தேவையற்ற எடை குறைந்து சிக்கென்ற தோற்றத்தைப் பெறலாம்.
கொஞ்சம் அதிக புளிப்பு, கொஞ்சமான இனிப்பு, எஞ்சிய துவர்ப்பு, சற்றே கசப்பு என்றிருக்கும் நெல்லிக்கனி இன்று பரவலாக எல்லோரது வீட்டிலும் பழங்கள் காய்களுடன் நீக்கமற நிறைந்திருக்க தொடங்கியிருக்கிறது. எலுமிச்சையைத் தொடர்ந்து ராஜ கனி என்று அழைக்கப்படும் இந்த நெல்லிக்கனியின் பங்கு அளப்பரியது.
- ஆத்ம ஞான மையம்
Негізгі бет தினமும் நெல்லிக்காய் சாப்பிடுவதால் இத்தனை நன்மைகளா? Benefits of eating Gooseberry (Amla) daily
Пікірлер: 615