திருநெடுங்குளம் நெடுங்களநாதர் கோயில்.
திருநெடுங்களம் நித்திய சுந்தரேசுவரர் கோயில் பாடல் பெற்ற தலங்களுள் ஒன்றாகும். சம்பந்தர் பாடல் பெற்ற இந்தச் சிவாலயம்.திருச்சி மாவட்டத்தில் துவாக்குடியிலிருந்து 5 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. இங்குள்ள இறைவன் நித்தியசுந்தரர்; இறைவி ஒப்பிலா நாயகி. தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரி தென்கரைத் தலங்களில் அமைந்துள்ள எட்டாவது சிவத்தலமாகும்.
இத்தலம் பற்றிய தேவாரப் பதிகங்கள்
சிலவற்றைக் கீழே காணலாம்.
திருஞான சம்பந்தர் பாடிய பதிகம்:
மறையுடையாய் தோலுடையாய் வார்சடை மேல்வளரும்
பிறையுடையாய் பிஞ்ஞகனே யென்றுனைப் பேசினல்லால்
குறையுடையார் குற்றமோராய் கொள்கையி னாலுயர்ந்த
நிறையுடையார் இடர்களையாய் நெடுங்கள மேயவனே.
மலைபுரிந்த மன்னவன்றன் மகளையோர் பால்மகிழ்ந்தாய்
அலைபுரிந்த கங்கைதங்கும் அவிர்சடை ஆரூரா
தலைபுரிந்த பலிமகிழ்வாய் தலைவநின் றாள்நிழற்கீழ்
நிலைபுரிந்தார் இடர்களையாய் நெடுங்கள மேயவனே..
ta.wikipedia.o...
Негізгі бет திருநெடுங்குளம் | நெடுங்களநாதர் கோயில் | Thirunedungulam | Nedungalanathar Temple | Sivan Temple
Пікірлер