Song : Uchiyile Theriyuthu Paar Karthigai Deepam - Tamil Lyrical Video
Sivan Song
Singer : Ramu
Music : Kanmaniraja
Director & Producer : Durga Prasad Vadlamudi
Lyrics : Senkathirvanan
Video : Kathiravan Krishnan
Production : Arunagiri Alaivarisai
பாடல் : உச்சியிலே தெரியுது பார் கார்த்திகை தீபம் - தமிழ் பாடல்வரிகள்
சிவன் பாடல்
குரலிசை : ராமு
இயக்கம் & தயாரிப்பு : துர்கா பிரசாத்
இசை : கண்மணிராஜா
கவியாக்கம் : செங்கதிர்வாணன்
காட்சிப்பதிவு : கதிரவன் கிருஷ்ணன்
தயாரிப்பு : அருணகிரி அலைவரிசை
பாடல்வரிகள் :
அண்ணாமலையே சிவனே போற்றி
அருணாசலனே இறைவா போற்றி
போற்றி போற்றி போற்றி போற்றி
உச்சியிலே தெரியுது பார் கார்த்திகை தீபம்
நம் உள்ளத்திலே ஒளி கொடுக்கும் ஆனந்த தீபம்
நிச்சமயமாய் நல்லதையே நடத்திடும் தீபம்
நாம் நினைத்தவுடன் முக்தியினை வழங்கிடும் தீபம்
வழங்கிடும் தீபம் வளம் தரும் தீபம்
அண்ணாமலை தீபம் ஆதி சிவன் தீபம்
அரோகரா சொன்னால் அருள் கொடுக்கும் தீபம்
திருக்கார்த்திகை நாளினிலே விரதமிருப்போம்
அதன் பெருமைகளை உலகறிய பாட்டுபாடிப்போம்
சிற்றரசன் திரிசங்கு பேரரசானான்
தான் இழந்த நாட்டை பகீரதன் மீண்டும் அடைந்தான்
நாரதரும் கடுமையாக விரதமிருந்தார்
பின் சப்தரிஷிகள் வியந்திடவே மேன்மை அடைந்தார்
பட்டதுயர் அத்தனையும் விட்டுப் போகுமே
அந்த பரமசிவன் அருள் நமக்கு வந்து சேருமே
மகா மகா தீபம் இது மகிமையுள்ள தீபம்
உமாபதி உடனிருக்கும் உண்ணாமலை தீபம்
மலை உச்சியிலே தெரியுது பார் கார்த்திகை தீபம்
வீடு தோறும் அகல் விளக்கு ஏற்றிடுவோமே
வரும் வினையாவும் விலகிடவே வேண்டிடுவோமே
முதல் நாளில் ஏற்றுவது பரணி தீபமே
மறு நாளில் ஏற்றிடுவார் மகா தீபமே
மாவிளக்கு ஏற்றி வைக்கும் மங்கையர்க்கெல்லாம்
நல்ல மணவாளன் வாழ்க்கையிலே துணைவருவானே
கற்று மழை புயலோட வேகம் தணியவே
தீபம் ஏற்றுவதால் ஊருக்கெல்லாம் நன்மை விளையுமே
அருணமலை தீபம் இது அகிலம் காக்கும் தீபம்
சொக்கப்பனை கொளுத்தி சிவனை போற்றுகின்ற தீபம்
அடிமுடியைக் கண்டுவர அயனும் மாலுமே
ஆகாயம் பூமியென்று அலைந்துவந்தாரே
விடைகாண முடியாமல் உள்ளம் வருந்தியே
வெட்கத்தால் தலைகுனிந்து வந்து நின்றாரே
அருகினில் எவரும் தான் நெருங்கிடாமலே
அனலுருவாய் சிவபெருமான் எழுந்து நின்றாரே
ஜோதியாக காட்சி தந்த சிவனைப் போற்றியே
கார்த்திகையில் தீபமேற்றி வழிபடுவோமே
திருக்கார்த்திகை தீபம் வழி காட்டுகின்ற தீபம்
இருள் நீக்கிடும் தீபம் ஈசன் அருள் தீபம்
வாசல் தோறும் தீபம் வாழ்வை வளமாக்கும் தீபம்
நமசிவாய என்றால் நாளும் நலம் கொடுக்கும் தீபம்
Негізгі бет உச்சியிலே தெரியுது பார் கார்த்திகை தீபம் | Karthigai Deepam | Sivan Song | Arunagiri Alaivarisai
Пікірлер: 2