வேலூர் ஶ்ரீநாராயணி பீடத்திற்கு கொண்டு வரப்பட்ட உலகிலேயே மிகப்பெரிய நடராஜர் சிலை..!
கும்பகோணம் சிற்பி வடிவமைத்த நடராஜர் சிலை, அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வருகிறது. சோழர்கால பாரம்பரிய ஆகமவிதி முறையில் ஒரு சிற்பக் கூடத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது. வரதராஜன் என்ற சிற்பி சுமார் 10 ஆண்டு காலமாக இந்த சிலையை வடிவமைத்துள்ளார். 23 அடி உயரம், 17 அடி அகலம் கொண்ட இந்த சிலை 15 ஆயிரம் கிலோ எடை கொண்டது. இது ஒரே வார்ப்பில் ஐம்பொன் சிலையாக தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த சிலையை பொருத்தும் பணி, 2 கிரேன்கள் உதவியுடன் நடைபெற்றது. இந்த சிலை வரும் திங்கட்கிழமை அன்று வேலூர் ஶ்ரீநாராயணி பீடத்திற்கு கொண்டு வரப்பட்டது . ஹரி ஓம் 🙏
Негізгі бет உலகின் உயரமான நடராஜர் சிலை 15ஆயிரம் கிலோ எடையுடன்.
Пікірлер: 1