#tamil #tamilchristian #tamilchristiansongs
உம்மை நம்பி நானும் வந்தேன்
என் தேவா நான் உம்மைப் பாடுவேன்
எந்தன் வாழ்வில் நன்மை செய்தீர்
என் தேவா நான் உம்மைப் பாடுவேன்
இரக்கம் உள்ளவர் சர்வ வல்லவர்
நன்மை செய்பவர்
எனக்குள் வாழ்பவர்
காருண்யம் நிறைந்தவரே
நன்மைகள் செய்பவரே
என்னையும் கண்டவரே நன்றி அப்பா
பெலவீன நேரங்களில் பெலனைக் கொடுத்தவரே
மரணத்தின் விளிம்பில் என்னைக் கண்டீரப்பா
பரிசுத்தமானவரே பரலோக தேவனே
மகிமையின் கர்த்தரே
நான் உம்மைப் பாடுவேன்
உன்னதமானவரே உயர்ந்த தேவனே
உம் நாமம் உயர்த்தி நான் பாடிடுவேன்
அற்பமான எந்தன் வாழ்வை
அற்புதமாய் மாற்றினீரே
ஆச்சரியமானவரே அதிசய தேவனே
அழகான ஊழியத்தை
என் வாழ்வில் தந்தவரே
கனமான பாத்திரமாய் என்னையும் மாற்றினீரே
(பரிசுத்தமானவரே)
Негізгі бет Ummai Nambi Naanum Vanthen | Pas.Shankar | Ithayathitkettavare - 03 | Tamil Christian Song
Пікірлер: 40