உம்மைக் கண்டோம் கலிதீர்ந்தோம் - எங்கள்
தாயே மாமரியே -நலம்
கொண்டோம் நிறைவானோம்
வேளாங்கண்ணியிலே -அருள்நிறை
மரியே நீ வாழ்க - வரம்நிறை
தாயே நீ வாழ்க -தரணியின்
தஞ்சமே வாழ்க - நீ
வாழ்க வாழ்கவே
வானக அன்பினுக்கே வழியமைத்தாய்
வையக மாந்தரின் பழிதுடைத்தாய்
தொடர்ந்து வரும் துணைக்கரமாய்
வேளை நகர் வந்தாய் - அருள்கின்ற
மரியே நீ வாழ்க - வரம்நிறை
தாயே நீ வாழ்க -தரணியின்
தஞ்சமே வாழ்க - நீ
வாழ்க வாழ்கவே
தரிசித்த யாவருக்கும் தயை பொழியும்
பரிசுத்த தாயுந்தன் பாதம்பணிந்தோம்
அனுதினம் யாம் ஏங்குகின்ற
அமைதி தாருமே - அருள்கின்ற
மரியே நீ வாழ்க - வரம்நிறை
தாயே நீ வாழ்க -தரணியின்
தஞ்சமே வாழ்க - நீ
வாழ்க வாழ்கவே
Негізгі бет வருகை பாடல் - மாதா - உமை கண்டோம் கலி தீர்ந்தோம் - Umai Kandom Kali Theernthom - Entrance - Mr.Tony
Пікірлер: 3