திருமணம் என்பது ஒவ்வொருவர் வாழ்விலும் முக்கியமான ஒன்று. அர்த்தம் பொதிந்த வாழ்க்கையின் ஆணிவேரே அதுதான். இல்லறம் நல்லறமானால், வம்சம் தழைக்கும், வாரிசுகள் உருவாகும். வாரிசுகள் உருவானால்தான் அவருடைய சந்ததிகள் வழி வழியாய், ஆல்போல் தழைத்து, அருகுபோல் வேரோடி, வாழையடி வாழையாய் வளரும், வளர்ந்து கொண்டே இருக்கும். ஆனால் இங்கே திருமணமே நடைபெற முடியாத பலர் இருக்கிறார்கள். ஆசையற்று போவதல்ல, அனைத்து முயற்சிகளையும் செய்தும் நடைபெற முடியாத நிலை. அவர்களைப் பற்றியதல்ல இந்த பதிவு. திருமணம் நடக்கிறது. ஆனால் அந்த திருமணம் விசித்திரமாக, சர்சைகள் நிறைந்ததாக, மற்றவர்கள் பார்வையில் ஒரு பேசுபொருளாக மாறிவிடும் விநோதங்களும் அரங்கேறுகிறது. அதில் ஒன்றுதான் வயது வித்தியாச திருமணங்கள். அதைப் பற்றியதுதான் இந்த பதிவு.
- Күн бұрын
வயது வித்தியாச திருமணங்கள்| Different age marriage in tamil | Thamizhan Mediaa
- Рет қаралды 70,588
Пікірлер: 79