வேலூர் 28-7-24
மாணவர்கள் தோல்வியிலிருந்து வெற்றிக்கான பாடத்தை கற்க வேண்டும் அவ்வாறு ஆய்வுகளின் போது பல தோல்விகளை கடந்து தான் சந்திராயன் 3 நிலவின் தென் துவருவத்தில் இறக்கினோம்-காட்பாடியில் வேலூர் தொழில் நுட்ப பல்கலைக்கழகத்தில் ஸ்டார்ஸ் மாணவர் சேர்க்கை விழாவில் -இஸ்ரோ சந்திராயன் -3 திட்ட இயக்குநர் வீரமுத்துவேல் பேச்சு
_____________________________________
வேலூர்மாவட்டம்,காட்பாடியில் உள்ள வேலூர் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் பல்கலைக்கழகம் சார்பில் ஸ்டார்ஸ் என்ற கிராமப்புற ஏழை மாணவர்கள் மற்றும் மாவட்டத்தில் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் முதல் மதிப்பெண் எடுத்து மாணவர்களை எவ்வித கட்டணமுமின்றி சேர்த்து தங்கும் இடம் உணவு ஆகியவைகள் இலவசமாக வழங்கி படிக்க வைக்கின்றனர் அதே போல் இந்த ஆண்டும் ஸ்டார்ஸ் மாணவர் சேர்க்கை விழாவானது வேலூர் தொழில் நுட்ப பல்கலைக்கழக வேந்தர் விசுவநாதன் தலைமையில் நடந்தது இவ்விழாவில் பல்கலைக்கழக துணை தலைவர்கள் சங்கர்,செல்வம் உள்ளிட்டோரும் மாற்றம் அறக்கட்டளை நிறுவனர் சுஜித் உள்ளிட்டோரும் பங்கேற்றனர் இந்த விழாவில் சிறப்பு அழைப்பாளராக இஸ்ரோ சந்திராயன் 3 திட்ட இயக்குநர் வீரமுத்துவேல் பங்கேற்று மாணவ,மாணவிகளுக்கு சேர்க்கை ஆணை மற்றும் மடிகணினிகளை வழங்கினார்
இவ்விழாவில் வி.ஐடி பல்கலைக்கழக வேந்தர் விசுநாதன் பேசுகையில் கல்வி மத்திய பட்டியலுக்கு சென்றது ஆனால் மத்திய மாநில அரசுகள் கல்விக்காக பணத்தை அளிக்காமல் கல்வி நிறுவனங்களிடமிருந்து ஜி.எஸ்டி உள்ளிட்ட பல வரிகளை வசூலிக்கின்றனர் என பேசினார்
பின்னர் இவ்விழாவில் இஸ்ரோ விஞ்ஞானியும் சந்திராயன் -3 திட்ட இயக்குநருமான வீரமுத்துவேல் பேசுகையில் மாணவர்கள் விடா முயற்சி கடின உழைப்பை கடைபிடிக்க வேண்டும் தோல்விகளிலிருந்து பாடம் கற்க வேண்டும் அப்போது தான் வெற்றியை அடைய முடியும் அப்படி தான் சந்திராயன் 3 திட்டத்தில் நிலவில் சந்திராயன் 3 தென் துருவத்தில் இறக்குவது குறித்து ஆய்வு மையத்தில் பல கட்ட சோதனைகளை செய்தோம் ஒவ்வொரு சோதனையும் தோல்வியை அடைந்தது நாங்கள் ஆனால் அந்த தோல்விக்கான காரணங்களை கண்டறிந்து அனைத்து தோல்வி காரணங்களையும் சரி செய்து சந்திராயன் 3 வெற்றிகரமாக நிலவில் இறக்கினோம் நாட்டிற்கும் பெருமையை சேர்த்தோம் அதை போல் நீங்களும் விடா முயற்சியுடன் தோல்விக்கான காரணங்களை கண்டறிந்தால் வெற்றி பெறலாம் என பேசினார்
Негізгі бет VLR STARS SHCEME ISRO PROJECT DIRECTOR CHANRAYAN 3 VEERAMUTHUVEL SPEECH
Пікірлер