முட்டை குழம்பு செய்ய தேவையான பொருட்கள்
முட்டை 2
சின்ன வெங்காயம் 15
தக்காளி 1
கறிவேப்பிள்ளை
கடுகு 1 தேக்கரண்டி
சோம்பு 1 தேக்கரண்டி
பட்டை 1
மிளகாய் தூள் 1 கரண்டி
கரம் மசாலா ௧ கரண்டி
மல்லி தூள் 1 1/2 கரண்டி
மஞ்சள் தூள் சிறிது
தேங்காய் துறுவல் 2 கரண்டி
கடலை எண்ணெய் மற்றும் உப்பு தேவைக்கேற்ப
முதலில் கடலை எண்ணெய் சேர்த்து சூடான உடன் கடுகு சோம்பு பட்டை சேர்த்து பொரிந்ததும் வெங்காயம் தக்காளி கறிவேப்பிள்ளை சேர்த்து வதக்கவும். அத்துடன் மிளகாய் தூள், மல்லி தூள், கரம் மசாலா, மஞ்சள் தூள் சேர்த்து வதக்கவும். சிறிது தண்ணீர் சேர்த்து அரைத்து வைத்த தேங்காய் சேர்த்து கிளரவும். அத்துடன் இரண்டு முட்டை சேர்த்து வேகவைக்கவும். முட்டை குழம்பு தயார்.
Негізгі бет 84.Egg gravy | முட்டை குழம்பு
Пікірлер