1193 படிகள் கொண்ட தோரணமலை முருகன் திருக்கோயிலை பற்றிய வீடியோ பதிவை இக்காணொளியில் காணலாம்.
மேற்குத் தொடர்ச்சி மலைகளின் இயற்கை எழிலுக்குத் தோரணமாய் அமைந்திருக் கிறது, தோரண மலை. யானையைப் போன்று காட்சியளிப்பதால் 'வாரண மலை’ என்று அழைக்கப்பட்டு, பிற்காலத்தில் தோரண மலை எனப் பெயர் பெற்றுவிட்ட இந்த மலையில், மாமுனிவர் அகத்தியர் தங்கியிருந்து மருத்துவப் பணி செய்திருக்கிறார்.
அவருடைய சீடரான தேரையர் மகா சமாதி அடைந்ததும் இங்குதான். இன்றைக்கும் சித்தர்கள் பலர் அரூபமாக வந்திருந்து வழிபடும் தெய்வ மலை இது என்கிறார்கள். இத்தனைச் சிறப்புகளுக்கும் சிகரம் வைத்தாற்போன்று, தோரண மலையின் உச்சியில் ஒரு குகையில் கோயில் கொண்டிருக்கிறான் அழகு முருகன்.
குற்றாலத்துக்கு அருகில் இருக்கும் தென்காசியில் இருந்து கடையம் செல்லும் சாலையில் அமைந்திருக்கிறது தோரணமலை. இதன் உச்சியில் மட்டுமல்ல, அடிவாரத்திலும் முருகன் கோயில்கொண்டிருக்கிறான்.
#thoranamalai #trekkingvlogs #murugan #trekking
Негізгі бет அகஸ்தியர் வழிபட்ட தோரணமலை முருகன்|THORANAMALAI MURUGAN TEMPLE|1193 படிகள் கொண்ட குகைக்கோயில்| VLOG
Пікірлер: 24