அழகு அழகு... ஸ்ரீ ஹரிஹரபுத்ர த்யானம் - மஞ்சப்ரா ஸ்ரீ மோகன் பாகவதர்-ஆலங்குடி ராதாகல்யாணம்
அழகு அழகு அழகு அழகு
ஐயப்பன் அழகு
அவர் அடிமலரை பணிபவர்க்கு
யாவுமே அழகு.. ( அழகு )
கரிமலையில் ஏறுகின்ற
காட்சியும் அழகு
அந்த கருணாமூர்த்தி தயவினிலே
இறக்கமும் அழகு...
பம்பா நதி நீராடும்
பக்தர்கள் அழகு...
பம்பையிலே சக்தியும்
அழகோ அழகு... ( அழகு )
கன்னிமூல கணபதியின்
காட்சியும் அழகு
ஸீதா ராமஜெய ஹனுமந்தனின்
சாட்சியும் அழகு...
நீலிமலை ஏற்றத்திலே
நிர்மலம் அழகு அந்த
நித்யானந்தன் கருணையினால்
ஏற்றமும் அழகு... ( அழகு )
பதினெட்டு படிகளிலும்
தத்துவம் அழகு அந்த
பந்தளத்தில் மாமணியின்
தரிசனம் அழகு
நெய்யாலே அபிஷேகம்
நித்யமும் அழகு
பொன்னம்பல மேட்டினிலே
ஜோதியும் அழகு... ( அழகு )
அழகு அழகு
அழகு அழகு
ஐயப்பன் அழகு
எங்கள் ஐயப்பன் அழகு
நம்ம ஐயப்பன் அழகு
SMS Your views to: 9444922848
Негізгі бет Музыка Azhagu Azhagu Ayappan Azhagu | Manjapra Sri Mohan | Alangudi Radhakalyanam 2013
Пікірлер: 115