Welcome to Yarl Tamil Kitchen 🙏🙏
Jaffna style Breadfruit Curry
ஈரப்பலாக்காய் கறி - Breadfruit curry
தேவையான பொருட்கள்: !
1) 1 சிறிய ஈரப்பலாக்காய் - 700கிராம்
2) 2 சிறிய பம்பாய் வெங்காயம்
3) 5 உள்ளிகள்
4) 5 பச்சைமிளகாய்
5) 1 துண்டு இறம்பை இலை ( அவசியம் அல்ல )
6) கருவேப்பிலை தேவையான அளவு
7) 1 தேக்கரண்டி மஞ்சள் தூள்
8) உப்பு தேவையான அளவு
9) 1 கப் கெட்டியான முதல் தேங்காய்ப் பால்
10) 2 -3 கப் இரண்டாம் தேங்காய்ப்பால் அல்லது தண்ணீர்
11) 1/2 எலுமிச்சையின் சாறு
12) மிளகு தூள் தேவையான அளவு
தாளிக்க:
1) 1 மேசைக்கரண்டி எண்ணெய்
2) 3 காய்ந்த செத்தல் மிளகாய்
3) 1 தேக்கரண்டி கடுகு
4) 1 தேக்கரண்டி வெந்தயம்
5) சிறிதளவு வெட்டிய வெங்காயம்
6) 1/2 தேக்கரண்டி சின்னசீரகம் / பெருஞ்சசீரகம்
7) உள்ளி / இஞ்சி தேவையான அளவு
செய்முறை:
ஈரப்பலாக்காயின் தோலைச்சீவி அகற்றி துண்டுகளாக வெட்டவும். பலாக்காயின் நடுவில் உள்ள தண்டு போன்ற பகுதியையும் அகற்றவும். ஒரு பாத்திரத்தில் வெட்டிக் கழுவிய ஈரப்பலாக்காய், 2 ,வெட்டிய வெங்காயம், பச்சைமிளகாய், உள்ளி, மஞ்சள் தூள், இறம்பை, கருவேப்பிலை , 2-3 கப் கப்பிப்பால் அல்லது தண்ணீர் சேர்த்து நன்றாக அவிய விடவும். பலாக்காய் நன்கு அவிந்த பின்பு கெட்டியான முதல் தேங்காய்ப்பாலை ஊற்றி தேவையான அளவு உப்பு சேர்த்து கறி கொதித்த பின்பு இறக்கி 1/2 எலுமிச்சையின் சாறு, தாளிதம் சேர்த்து பரிமாறவும்.
#இலங்கையின்சுவைமிகுஈரப்பலாக்காய்கறி
Негізгі бет இலங்கையின் சுவைமிகு ஈரப்பலாக்காய் கறி Srilankan Style Breadfruit Curry in tamil
Пікірлер: 79