Tune,Lyrics : Sankar Yasagan
Music : J.Prakash (Vibes On Sets Studio, Bommidi.)
Singers : Prasanth Friend (B.Pallipatti)
Ramalingam (Pappireddipatti)
P.Vijay (B.Pallipatti)
Sankar Yasagan (Bommidi)
J.Prakash (Bommidi).
Video Edting : Sankar Yasagan
Mixing & Mastering : Vibes On Sets Studio, Bommidi. (99948 40378)
இந்தியா எங்கள் இந்தியா
என்றுமே எங்கள் இந்தியா
வேற்றுமையில் ஒற்றுமை காண்போம் - நாம்
போற்றும் பாரதம் காப்போம்
தாய் மண்ணை வணங்கி நிற்போம் - நம்
நாட்டை பேணிக்காப்போம்
சாதி மதங்களை கடந்து வாழ்வோமே.....
(இந்தியா)
1
தேசம் மீது நேசம் கொண்ட
தேசத் தலைவர் வாங்கி தந்த
சுதந்திரத்தை காக்கும் கடமை
நம்முடனே பிறந்துள்ளது
உதிரத்தை உரங்களாய் ஊற்றி
உயிர்களை பல இழந்து தந்த
இதயத்தில் மகிழ்ந்த நாளே
இனிமையான இன்னாளே
எல்லா மொழியும் நம் மொழியே
எல்லா மதமும் நம் மதமே
எல்லா இனமும் நம் இனமே
எல்லா மக்களும் உடன்பிறப்பே
எல்லா மொழியும் நம் மொழியே
எல்லா மதமும் நம் மதமே
எல்லா இனமும் நம் இனமே
எல்லா மக்களும் உடன்பிறப்பே
நீ சுவாசிக்க நீ நேசிக்க
உனக்கென ஒரு நாடு- அது
இந்திய திருநாடு.....
(அது இந்திய திருநாடு.....)
இந்தியா எங்கள் இந்தியா
என்றுமே எங்கள் இந்தியா
2
உண்மை அன்பு நேர்மையாக
உலகத்தில் வாழ்ந்திட வேண்டும்
லஞ்சத்தை அழித்து விட்டு
நெஞ்சத்தை உயர்த்த வேண்டும்
பெண்களை தெய்வமாக
வணக்கிடவே வேண்டுதல் வைப்போம்
இமயம் முதல் குமரி வரையில்
இந்தியனாய் ஒன்றுபடுவோம்
பிறப்பதுவும் ஒரு முறையே
வாழ்வதுவும் ஒரு முறையே
இன்னுயிர் பல தந்து
வாங்கி தந்தனர் சுதந்திரத்தை
பிறப்பதுவும் ஒரு முறையே வாழ்வதுவும் ஒரு முறையே
இன்னுயிர் பல தந்து
வாங்கி தந்தனர் சுதந்திரத்தை
நீ சுவாசிக்க நீ நேசிக்க
உனக்கென ஒரு நாடு- அது
இந்திய திருநாடு.....
(அது இந்திய திருநாடு).....
(இந்தியா)
இந்தியா எங்கள் இந்தியா
என்றுமே எங்கள் இந்தியா
வேற்றுமையில் ஒற்றுமை காண்போம் - நாம்
போற்றும் பாரதம் காப்போம்
தாய் மண்ணை வணங்கி நிற்போம் - நம்
நாட்டை பேணிக்காப்போம்
சாதி மதங்களை கடந்து வாழ்வோமே.....
இந்தியா எங்கள் இந்தியா
என்றுமே எங்கள் இந்தியா.......
Негізгі бет இந்தியா எங்கள் இந்தியா..... India Yengal India Tamil Patriotic Song
Пікірлер: 61