'லாக் டவுன் டைரி' பட இசை - டிரெய்லர் வெளியீட்டு விழா
==========================================
அங்கிதா புரடக்ஷன் எஸ். முரளி அதிக பொருட் செலவில் தயாரிக்கும் படம் "லாக் டவுன் டைரி".
900 படங்களுக்கு ஸ்டண்ட் மாஸ்டராக பணியாற்றியிருக்கும் ஜாலி பாஸ்டியன் இப்படத்தை இயக்கியிருக்கிறார். ஒளிப்பதிவாளர் பி.கே.எச் தாஸ். இசை ஜாசி கிஃப்ட் & AB முரளி
இதில் ஜாலி பாஸ்டியன் மகன் விஹான் ஜாலி (அமீத்) கதாநாயகனாக அறிமுகமாகிறார். சஹானா கதாநாயகியாக நடிக்கிறார். எம்.எஸ்.பாஸ்கர்,. மொட்டை ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.
இப்படத்தின் இசை, டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் பத்திரிக்கையாளர்கள் மீடியாவினர் முன்னிலையில் நடந்தது. நிகழ்ச்சியில் சென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் மாவட்ட திரைப்பட விநியோகஸ்தர் சங்க தலைவர் கே.ராஜன், பெப்சி விஜயன், தவசி ராஜ், நடிகர்கள் எம்.எஸ்.பாஸ்கர், முத்துக்களை, நடிகை பிரவீனா, லியாகத் அலிகான், வசனகர்த்தா பிரபாகரன், எஸ்.முரளி மற்றும் பட குழுவினர் கலந்துகொண்டனர்.
நடிகர் எம் எஸ் பாஸ்கர் பேசியதாவது:
ஜாலி மாஸ்டர் என்னை அழைத்து நீங்க எப்படி வேண்டு மென்றாலும் பேசி நடிங்க என்று சுதந்திரம் தந்தார். ஹீரோவின் வளர்ப்பு தந்தையாக மெக்கானிக் ஷெட் ஓனராக என்னை நடிக்க வைத்திருக்கிறார். நல்ல கதை அம்சம் கொண்ட படம். ஆக்ஷன் சென்டிமென்ட், காமெடி எல்லாம் இதில் உள்ளது. இப்படம் வெற்றி பெற வேண்டிக்கொள்கிறேன்.
Негізгі бет Lockdown Diary Movie Audio Launch | M.S.Baskar Speech
Пікірлер