album: Guru Dhakshina
Singers: Shanthi Suresh & V.V. Prassanna
Raga- keeravani
ஓம் நமோ பகவதே காமகோடி சந்த்ரஷேகராய
பல்லவி
சந்த்ர ஷேகரேந்த்ர மஹா பெரியவா
சரஸ்வதியின் ரூபமான பெரியவா
மஹா பெரியவா
காஞ்சி பெரியவா
மனித தெய்வமாய் வந்த பெரியவா
பார்வையில் அருள்தூவிடும் தவம் பெரியவா பெரியவா....
சரணம் 1
சந்த்ரஷேகரேந்த்ர சரஸ்வதியாய்
ஆராதனமே ஏற்கும் வரமே
ஜகம் வாழவே உன் அருட்பார்வையால் வழிகாட்டிய மஹா பெரியவா
ஸந்ததம் நம்முடனே உரையும் காஞ்சி முனிவரே
ஸ்ரீ காமகோடி பீட ஞானியே கனகாபிஷேகம் கண்ட குருமகிமை அளவில்லாததே (சந்த்ர.... )
சரணம் 2
பன்மொழி பேசும் பவளத்திருவாய் பரிவினை வீசும் கருணைக் கண்கள்
ஷங்கர பீடம் கோயிலானதே சந்த்ரஷேகரம் தெய்வமானதே
தன்னிகரில்லா பரமாச்சார்யரே பாமரர்க்கும் எளிய பண்டிதரிவரே
சங்கரா ஷங்கரா சொல்லியே பணிவேனே நான்...
ஷிவஷிவ ஷங்கர
ஹர ஹர ஷங்கர
காஞ்சி ஷங்கர
காமகோடி சங்கர
- வரஸ்ரீ
Негізгі бет Ойын-сауық Maha Periyava by Shanthi suresh
Пікірлер: 166