நச்சரவமென்று - திருப்புகழ்
நச்சு அரவம் மென்று நச்சு அரவம் என்று
நச்சு உமிழ் களங்க மதியாலும்
நத்தொடு முழங்கு கனத்தொடு முழங்கு
நத்திரை வழங்கு கடலாலும்
இச்சை உணர்வு இன்று இச்சை என வந்த
இச்சிறுமி நொந்து மெலியாதே
எத்தனையி நெஞ்சில் எத்தனம் முயங்கி
இத்தனையில் அஞ்சல் எனவேணும்
பச்சைமயில் கொண்டு பச்சை மற மங்கை
பச்சை மலை எங்கும் உறைவோனே
பத்தியுடன் நின்று பத்தி செயும் அன்பர்
பத்திரம் அணிந்த கழலோனே
கச்சு இவர் குரும்பை கச்சவர் விரும்பு
கச்சியில் அமர்ந்த கதிர்வேலா
கற்பக வனம் கொள் கற்பக விசும்பர்
கைத்தளை களைந்த பெருமாளே
Негізгі бет Музыка நச்சரவமென்று திருப்புகழ்
Пікірлер: 12