கொரியன் இயற்கை விவசாயத்தில் இந்த lactic acid bacteria பயன்படுத்தி வருகிறார்கள்.
இந்த லாக்டிக் ஆசிட் பாக்டீரியாவை வீட்டிலேயே சுலபமாக தயாரிக்கலாம்.
முதல் நாள்.
அரிசி கழுவிய தண்ணீரை சேகரித்து ஒரு கண்ணாடி பாட்டிலில் ஊற்றி அதன் வாய்ப்பகுதியை துணி கொண்டு கட்டி காற்று உள்ளே செல்லும் வண்ணம் மூன்று நாட்களுக்கு வைத்திருக்க வேண்டும்.
மூன்று நாட்களுக்குப் பிறகு அதில் புளித்த வாடை வீசும்.
நான்காவது நாள் ஒரு பங்கு அரிசி கழுவிய தண்ணீருடன் மூன்று பங்கு பசும்பால் சேர்த்து மற்றொரு கண்ணாடி பாட்டிலில் ஊற்றி வாய்ப்பகுதி காற்று உள்ளே செல்லும் வண்ணம் துணி மூலம் மூடி நிழல் பகுதியான இடத்தில் வைக்க வேண்டும்.
7 நாட்களுக்குப் பிறகு இந்த கரைசலில் லாக்டிக் ஆசிட் பாக்டீரியா உருவாகி விடும்.
மேலே உள்ள வெண்ணெய்க் கட்டியை அகற்றி விட்டு நடுப்பகுதியில் உள்ள லாக்டிக் ஆசிட் பேக்டீரியாவை சேமித்தும் தோட்டத்திற்கு பயன்படுத்திக் கொள்ளலாம்.
ஒரு லிட்டர் தண்ணீரில் 1ml லாக்டிக் ஆசிட் பாக்டீரியா கலந்து செடிகளுக்கு வேர் வழியாகவும் இலைகள் வழியாகவும் தரலாம்
#lactic_acid_bacteria
#நுண்ணுயிர்_உரம்
#guna_garden_ideas
Негізгі бет Тәжірибелік нұсқаулар және стиль நுண்ணுயிர் உரம் வீட்டிலேயே தயார் செய்யலாம் | Lactic acid bacteria korean natural farming method
Пікірлер: 93