#veerappan #sethukuligovindan #veerappanstory #veerappanhistory #kumararavikumar #farmers #farmerlife #agriculture #forest #koosemunisamyveerappan
Most people say that Veerappan shot the policemen on sight. But it is new information that he has gone without bothering the police even if they have done no wrong and no harm to him. Once, when Veerappan was going with his companions in the forest at night, a tent was set up somewhere and around twenty young policemen were sleeping. During Veerappan's search, Veerappan saw them wandering in the forest and sleeping tiredly. He has also removed the bed of the tent shed where they were sleeping. Seeing that, he asked, 'What sin did these people commit? They wander and sleep like this. Those who have children, come and lie in the forest. It is a sin to kill them!' He told this to Kumara Ravikumar, the head of the Kongu Youth Council from Sathyamangalam whom he met. Kumara Ravikumar shared that experience with us. A video recording of Ravikumar left and right attacking the land registrar for not acting responsibly by participating in farmers' protest related to land acquisition in Annoor area of Coimbatore has gone viral on the web. We also published that video. As a result, we had a special interview about him and his struggle life and published it in three parts so far. In its last part, Chandanakattu shares movingly about Veerappan.
வீரப்பனைப் பொறுத்தவரை போலீஸ்காரர்களை பார்த்தவுடன் சுட்டுக் கொன்றிருக்கிறார் என்பதுதான் பெரும்பாலானவர்கள் சொல்லும் விஷயம். ஆனால் அவர் போலீஸ்காரர்களே ஆனாலும் யாதொரு தவறும், தனக்கு தீங்கும் செய்யாத பட்சத்தில் அவர்களைத் தொந்தரவு செய்யாமலே சென்றிருக்கிறார் என்பது புதுத்தகவல். ஒரு முறை காட்டுக்குள் வீரப்பன் தன் கூட்டாளிகளுடன் இரவில் சென்று கொண்டிருந்தபோது ஓரிடத்தில் டெண்ட் அமைத்து போலீஸ்கார இளைஞர்கள் சுமார் இருபது பேர் தூங்கிக் கொண்டிருந்துள்ளனர். வீரப்பன் தேடுதல் வேட்டையில் காடுகளுக்குள் அலைந்து திரிந்து களைத்து உறங்கிக் கொண்டிருந்த அவர்களை வீரப்பன் பார்த்திருக்கிறார். அதுவும் அவர்கள் உறங்கிக் கொண்டிருந்த டெண்ட் கொட்டகையின் படுதாவையே நீக்கிப் பார்த்திருக்கிறார். அதைப் பார்த்து விட்டு, ‘பாவம் இவர்கள் என்ன பாவம் செய்தார்கள்? இப்படி அலைந்து திரிந்து அசந்து தூங்குகிறார்களே. யார் பெற்ற பிள்ளைகளோ, காட்டுக்குள் வந்து கிடக்கிறார்கள். அவர்களை கொல்வது பாவம்!’ என்று நினைத்துச் சென்றிருக்கிறார். இதை தான் சந்தித்த சத்தியமங்கலத்தைச் சேர்ந்த கொங்கு இளைஞர் பேரவை நிறுவனத்தலைவர் குமார ரவிக்குமாரிடம் சொல்லியும் இருக்கிறார். அந்த அனுபவத்தை நெகிழ்ச்சியுடன் நம்மிடம் பகிர்ந்து கொண்டார் குமார ரவிக்குமார். கோவை அன்னூர் பகுதியில் நில எடுப்பு சம்பந்தமான விவசாயிகள் போராட்டத்தில் கலந்து கொண்டு பொறுப்பாக நடந்து கொள்ளாத அங்குள்ள பத்திரப்பதிவு அலுவலரை ரவிக்குமார் லெப்ட் அண்ட் ரைட் வாங்கின வீடியோ பதிவு ஒன்று வலைத் தளங்களில் வைரலானது. அந்தக் காணொளியை நாமும் வெளியிட்டிருந்தோம். அதன் தொடர்ச்சியாக அவரைப்பற்றியும், போராட்ட வாழ்க்கையும் குறித்து சிறப்புப் பேட்டி கண்டு, அதனை இதுவரை மூன்று பகுதிகளாக வெளியிட்டிருந்தோம். அதன் கடைசிப் பகுதியான இதில் சந்தனக்காட்டு வீரப்பனைப் பற்றி நெகிழ்ச்சியாகப் பகிர்ந்து கொள்கிறார்.
Негізгі бет வீரப்பன் கருணைகாட்டிய 20 போலீஸ் இளைஞர்கள் குமார ரவிக்குமார் பேட்டி: 4
Пікірлер: 27