Part-1: • 6.31 - Part-1 - இடர் க...
Part-2: • 6.31 - Part-2 - இடர் க...
For other padhigams: thevaramclass....
Odhuvar:
தர்மபுரம் சுவாமிநாதன் - Dharmapuram Swaminathan: • திருநாவுக்கரசு தேவாரம்...
கோ.ப. நல்லசிவம் - G.P. Nallasivam: • 6.31 - திருவாரூர் (இடர...
திருநாவுக்கரசர் தேவாரம் - 6.31 - இடர் கெடுமாறு எண்ணுதியேல் - திருவாரூர் - (திருத்தாண்டகம்)
tirunāvukkarasar tēvāram - 6.31 - iḍar keḍumāṟu eṇṇudiyēl - tiruvārūr - (tiruttāṇḍagam)
இப்பதிகப் பாடல்களைக் கீழ்க்காணும் தளத்தில் காணலாம்:
thevaramclass....
Verses of this padhigam are available in the above URL.
V. Subramanian
#thevaramclass #thiruppugazhclass #திருப்புகழ் #தேவாரம்
--------------
Word separated:
Thirunavukkarasar, full of devotion, sings padhigams and does service in Thiruvarur
1490 - பெரியபுராணம் - திருநாவுக்கரசர் புராணம் - 225
(அறுசீர் விருத்தம் - meter)
மார்பு ஆரப் பொழி-கண்ணீர் மழை வாரும் திருவடிவும், மதுர வாக்கில்
சேர்வு ஆகும் திருவாயில் தீந்தமிழின் மாலைகளும், செம்பொற்றாளே
சார்வு ஆன திருமனமும், உழவாரத் தனிப்-படையும் தாமும் ஆகிப்,
பார் வாழத் திருவீதிப் பணிசெய்து பணிந்து-ஏத்திப் பரவிச் செல்வார்.
1491 - பெரியபுராணம் - திருநாவுக்கரசர் புராணம் - 226
நீடு-புகழ்த் திருவாரூர் நிலவு மணிப்-புற்றிடங்கொள் நிருத்தர் தம்மைக்
கூடிய அன்பொடு காலங்களில் அணைந்து கும்பிட்டுக், கோது-இல் வாய்மைப்
"பாடிளம் பூதத்தினான்" எனும் பதிகம் முதலான பலவும் பாடி,
நாடிய ஆர்வம் பெருக நைந்து மனம் கரைந்து-உருகி நயந்து செல்வார்,
திருநாவுக்கரசர் தேவாரம் - பதிகம் 6.31 - திருவாரூர் - (திருத்தாண்டகம்)
(எண்சீர் விருத்தம் - தாண்டகம் - meter)
பாடல் எண் : 1
இடர் கெடுமாறு எண்ணுதியேல் நெஞ்சே நீ வா;
.. ஈண்டு ஒளி சேர் கங்கைச் சடையாய் என்றும்,
சுடர்-ஒளியாய் உள் விளங்கு சோதீ என்றும்,
.. தூ-நீறு சேர்ந்து இலங்கு தோளா என்றும்,
கடல்-விடமது உண்டு இருண்ட கண்டா என்றும்,
.. கலைமான் மறி ஏந்து கையா என்றும்,
அடல்-விடையாய் ஆரமுதே ஆதீ என்றும்,
.. ஆரூரா என்றென்றே அலறா நில்லே.
பாடல் எண் : 2
செடி ஏறு தீவினைகள் தீரும் வண்ணம்
.. சிந்தித்தேல் * நெஞ்சமே திண்ணமாகப்
பொடி ஏறு திருமேனி உடையாய் என்றும்,
.. புரந்தரன்-தன் தோள் துணித்த புனிதா என்றும்,
அடியேனை ஆளாகக் கொண்டாய் என்றும்,
.. அம்மானே ஆருர் எம்-அரசே என்றும்,
கடி நாறு பொழில்-கச்சிக் கம்பா என்றும்,
.. கற்பகமே என்றென்றே கதறா நில்லே.
(* சிந்தித்தேனெஞ்சமே = 1. சிந்தித்தேல் நெஞ்சமே; 2. சிந்தித்தேன் நெஞ்சமே;)
(* Variant reading: சிந்தித்தே நெஞ்சமே)
பாடல் எண் : 3
நிலைபெறுமாறு எண்ணுதியேல் நெஞ்சே நீ வா;
.. நித்தலும் எம் பிரானுடைய கோயில் புக்குப்,
புலர்வதன்முன் அலகிட்டு மெழுக்கும் இட்டுப்,
.. பூமாலை புனைந்து, ஏத்திப் புகழ்ந்து பாடித்,
தலையாரக் கும்பிட்டுக், கூத்தும் ஆடிச்,
.. சங்கரா சய போற்றி போற்றி என்றும்,
அலை-புனல் சேர் செஞ்சடை எம் ஆதீ என்றும்
.. ஆரூரா என்றென்றே அலறா நில்லே.
=====
Word separated version:
( Note: ṟ - strong (trill) ‘ra’ ; ḻ - ‘ழ’ - retroflex letter in Tamil / Malayalam )
Thirunavukkarasar, full of devotion, sings padhigams and does service in Thiruvarur
1490 - periyapurāṇam - tirunāvukkarasar purāṇam - 225
(aṟusīr viruttam - meter)
mārbu ārap poḻi-kaṇṇīr maḻai vārum tiruvaḍivum, madura vākkil
sērvu āgum tiruvāyil tīndamiḻin mālaigaḷum, semboṭrāḷē
sārvu āna tirumanamum, uḻavārat tanip-paḍaiyum tāmum āgip,
pār vāḻat tiruvīdip paṇiseydu paṇindu-ēttip paravic celvār.
1491 - periyapurāṇam - tirunāvukkarasar purāṇam - 226
nīḍu-pugaḻt tiruvārūr nilavu maṇip-puṭriḍaṅgoḷ niruttar tammaik
kūḍiya anboḍu kālaṅgaḷil aṇaindu kumbiṭṭuk, kōdu-il vāymaip
"pāḍiḷam būdattinān" enum padigam mudalāna palavum pāḍi,
nāḍiya ārvam peruga naindu manam karaindu-urugi nayandu selvār,
tirunāvukkarasar tēvāram - padigam 6.31 - tiruvārūr - (tiruttāṇḍagam)
(eṇsīr viruttam - tāṇḍagam - meter)
pāḍal eṇ : 1
iḍar keḍumāṟu eṇṇudiyēl neñjē nī vā;
.. īṇḍu oḷi sēr gaṅgaic caḍaiyāy eṇḍrum,
suḍar-oḷiyāy uḷ viḷaṅgu sōdī eṇḍrum,
.. tū-nīṟu sērndu ilaṅgu tōḷā eṇḍrum,
kaḍal-viḍamadu uṇḍu iruṇḍa kaṇḍā eṇḍrum,
.. kalaimān maṟi ēndu kaiyā eṇḍrum,
aḍal-viḍaiyāy āramudē ādī eṇḍrum,
.. ārūrā eṇḍreṇḍrē alaṟā nillē.
pāḍal eṇ : 2
seḍi ēṟu tīvinaigaḷ tīrum vaṇṇam
.. sindittēl * neñjamē tiṇṇamāgap
poḍi ēṟu tirumēni uḍaiyāy eṇḍrum,
.. purandaran-tan tōḷ tuṇitta punidā eṇḍrum,
aḍiyēnai āḷāgak koṇḍāy eṇḍrum,
.. ammānē ārur em-arasē eṇḍrum,
kaḍi nāṟu poḻil-kaccik kambā eṇḍrum,
.. kaṟpagamē eṇḍreṇḍrē kadaṟā nillē.
(* sindittēneñjamē = 1. sindittēl neñjamē; 2. sindittēn neñjamē;)
(* Variant reading: sindittē neñjamē)
pāḍal eṇ : 3
nilaibeṟumāṟu eṇṇudiyēl neñjē nī vā;
.. nittalum em pirānuḍaiya kōyil pukkup,
pularvadanmun alagiṭṭu meḻukkum iṭṭup,
.. pūmālai punaindu, ēttip pugaḻndu pāḍit,
talaiyārak kumbiṭṭuk, kūttum āḍic,
.. saṅgarā saya pōṭri pōṭri eṇḍrum,
alai-punal sēr señjaḍai em ādī eṇḍrum
.. ārūrā eṇḍreṇḍrē alaṟā nillē.
=====
Негізгі бет 6.31 - Part-1 - இடர் கெடுமாறு - idar kedumARu - Thevaram class (தமிழ்)
Пікірлер: 10