Broadway Bus Terminus Redevelopment Project latest update
பிராட்வே பேருந்து நிலைய மறுவளர்ச்சி திட்டத்தின் தற்போதைய நிலவரம்
இந்த பிராட்வே பேருந்து நிலையானது கோயம்பேட்டில் உள்ள புறநகர் பேருந்து நிலையம் செயல்பாட்டிற்கு வருவதற்கு முன்பு 2002-ஆம் ஆண்டு வரை தொலைதூர பேருந்துகளுக்கான முனையமாக செயல்பட்டது. இந்த பேருந்து நிலையம் 4.42 ஏக்கர் பரப்பளவில் மூன்று நடைமேடைகள் உடன் அமைக்கப்பட்டது. இந்த பேருந்து நிலையத்தில் சென்னை மாநகருக்குள்ளூம் மட்டுமல்லாமல் சென்னையை சுற்றியுள்ள புறநகர் பகுதிகளுக்கும் சேர்த்து சுமாராக 695 பேருந்துகள் ஆனது 70க்கும் மேற்பட்ட வழித்தடங்களில் 3872 நடைகளில் இயக்கப்படுகிறது. இந்தப் பேருந்து நிலையத்தை மேம்படுத்துவதற்காக பெருநகர சென்னை மாநகராட்சி ஆனது இதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இதற்காக ஒரு குடிமை அமைப்பானது இதற்கான விரிவான முன்மொழிவினை தமிழ்நாடு உள்கட்டமைப்பு மேம்பாட்டு வாரியத்திடம் சமர்ப்பித்தது. இதன் பிறகு இந்த திட்டத்திற்கான விரிவான சாத்தியக்கூறு அறிக்கையை தயாரிப்பதற்காக தமிழ்நாடு நகர்ப்புற உள்கட்டமைப்பு நிதி சேவைகள் நிறுவனமானது Jones Lang LaSalle என்ற ஆலோசனை நிறுவனத்தை நியமித்தது. இதற்கடுத்து இந்த திட்டம் செயல்படுத்துவதற்கான பொறுப்பினை சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டு, தமிழக அரசு சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகத்திடம் இந்த திட்டத்திற்கான விரிவான திட்ட அறிக்கையை தயாரிக்க உத்தரவிட்டது. அதன்படி கடந்தாண்டு பிப்ரவரி மாதம் 2-ஆம் தேதி சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகமானது Voyant Solution Pvt Ltd என்ற ஆலோசனை நிறுவனத்தை நியமித்து 4.25 கோடி மதிப்பில் இந்த திட்டத்திற்கான வரைபடம் மற்றும் விரிவான திட்ட அறிக்கையை தயாரிக்க உத்தரவிட்டது. அதன் பிறகு அதே பிப்ரவரி மாதம் 17-ஆம் தேதி என்ன திட்டத்தை Viability Gap Funding என்று சொல்லப்படுகிற நம்பகத்தன்மையான இடைவெளி நிதியின் அடிப்படையில் செயல்படுத்த முடிவு செய்யப்பட்டது. இதற்கடுத்து கடந்தாண்டு மார்ச் 15-ஆம் தேதி இந்த திட்டத்திற்காக ரூபாய் 300 கோடியை கொள்கை அளவிலான நிர்வாக அனுமதியின் மூலம் பெறுவதற்காக இதற்கான முன்மொழிவினை தமிழக அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டது. இதில் ரூ.300 கோடி மதிப்பிலான தொகையில் ரூபாய் 27.2 கோடியானது சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகத்திற்கு இந்த திட்டத்திற்கான திட்ட வரைபடம் மற்றும் ஆலோசனை சார்ந்த மேலாண்மை பணிகளை மேற்கொள்வதற்காக அவர்களுக்கான கட்டணமாக ஒதுக்கப்பட்டது. இதன் பிறகு கடந்தாண்டு ஜூன் மாதம் பெருநகர சென்னை மாநகராட்சியானது எந்த பிராட்வே பேருந்து நிலையத்தின் மேம்பாட்டுத் திட்டத்தை நம்பகத்தன்மையான இடைவெளி நிதியின் அடிப்படையில் அரசு மற்றும் தனியார் பங்களிப்புடன் செயல்படுத்த ஒரு தீர்மானத்தை நிறைவேற்றியது. இந்த திட்டம் முதலில் ரூ.900 கோடி மதிப்பில் 21 அடுக்குகள் கொண்ட கட்டிடத்தை இந்த பேருந்து நிலையத்தில் அமைக்கப்பட்டு இந்த கட்டிடத்தின் தரைதளத்தில் 80 பேருந்துகளை நிறுத்துவதற்கான நிறுத்தமிடங்களும், 2000 கார்கள் மற்றும் 2600 இருசக்கர வாகனங்களை நிறுத்துவதற்கான நிறுத்துமிடங்களும் வணிக வளாகங்கள் கடைகள் அலுவலகங்கள் மற்றும் இந்த பேருந்து நிலையத்தை சுற்றியுள்ள வணிகப் பகுதிகளுக்கு செல்வதற்கு ஏதுவாக நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் சாலை பக்கமாக உள்ள வணிகப் பகுதிகள் மற்றும் சென்னை கோட்டை ரயில் நிலையத்தை அணுகும் விதமாக ஒரு பயணிகள் நடை மேம்பாலங்களை அமைக்க திட்டமிடப்பட்டிருந்தது. தற்போது இந்த திட்டமானது மாற்றப்பட்டுள்ளது. அதன்படி இந்த பிராட்வே பேருந்து நிலையத்தில் ரூ.823 கோடி மதிப்பில் 14 லட்சம் சதுர அடி பரப்பளவிற்கு 8 அடுக்குகள் கொண்ட கட்டிடமும், 9 அடுக்குகள் கொண்ட கட்டிடம் என இரண்டு கட்டிடங்களை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதில் முதலாவது 8 அடுக்குகள் கொண்ட கட்டிடத்தில் முதல் இரண்டு தளங்களில் பேருந்து நிறுத்துமிடங்கள், பேருந்துகளை அணுகுவதற்கான நடைமேடைகளில் தானியங்கி முறையில் திறந்துவிடும் கதவுகள், குளிரூட்டப்பட்ட ஓய்வறைகள், கடைகள், உணவகங்கள் போன்ற வசதிகளும்; அதற்கடுத்துள்ள ஆறு தளங்களில் வணிக வளாகமாக பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கடுத்து 9 அடுக்குகள் கொண்ட கட்டிடமானது தற்போது குறளகம் என்று சொல்லப்படும் அரசுக்கு சொந்தமான வணிக வளாகம் இருக்கும் பகுதியில் அமைக்கப்படவுள்ளது. இதற்காக குரளகம் என்று சொல்லப்படும் அரசுக்கு சொந்தமான கட்டிடம் முழுமையாக இடிக்கப்படவுள்ளது. இந்த இரண்டு கட்டிடங்களிலும் கார்கள் மற்றும் இருசக்கர வாகனங்களை நிறுத்துவதற்காக இரண்டு அடித்தளங்கள் அமைக்கப்படவுள்ளது. அதேசமயம் இந்த இரண்டு கட்டிடங்களையும் இணைக்கும் விதமாக 6 மீட்டர் அகலம் கொண்ட வாகன சுரங்க பாதையானது இந்த பேருந்து நிலையத்தோடு இரண்டு கட்டிடங்களுக்கு இடையே உள்ள அடித்தளங்களில் அமைக்கப்படவுள்ளது. இந்தப் பேருந்து நிலையத்தின் 8 அடுக்குகள் கொண்ட கட்டிடத்தின் முதலாவது தளத்தில் பயணிகள் வசதிக்காக பயணச்சீட்டு வழங்குமிடம், காத்திருப்பு அரங்குகள், ஓய்வறைகள், உணவகங்கள், பேருந்துகளின் வழித்தடம், நடைமேடை, வருகை மற்றும் புறப்படும் நேரம் பற்றி அறிவிப்பதற்காக மின்னணு அறிவிப்பு பலகைகள் மற்றும் உதவி மையங்கள் போன்ற வசதிகள் செய்யப்படும். இதற்கடுத்து இரண்டாவது தளத்தில் பேருந்துகளை நிறுத்தி வைப்பதற்கான நிறுத்துமிடம் வசதியும் அதற்கடுத்துள்ள தளங்களில் வணிக வளாகம் ஆகவும் பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. அதேசமயம் இந்த 8 அடுக்குகள் கொண்ட கட்டிடத்தின் முதலாவது தளத்திலிருந்து நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் சாலை பக்கமாக உள்ள வணிகப் பகுதிகளுக்கு செல்வதற்கு ஏதுவாக ஒரு பயணிகள் நடைமேம்பாலமும், முத்துசாமி சாலையில் உள்ள சென்னை கோட்டை ரயில் நிலையத்தை அணுகுவதற்கு ஏதுவாக மற்றொரு பயணிகள் நடைமேம்பாலம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் இந்த பேருந்து நிலையத்திற்கு வெளியே ஆட்டோ மற்றும் இதர வாகனங்களை நிறுத்தி வைப்பதற்கான நிறுத்துமிடம் வசதியும் செய்யப்படவுள்ளது.
Негізгі бет Ойын-сауық Broadway Bus Terminus Redevelopment Project | பிராட்வே பேருந்து நிலைய மறு வளர்ச்சி திட்டம் 🌇🚍🚎
Пікірлер: 5